டாப் எண்ட் மாடல், 108 எம்பி கேமராவுடன் அறிமுகம்: பிளாக் ஷார்க் 5, 5 ஆர்எஸ், 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்: வேறவெவல்!
பிளாக் ஷார்க் 5, பிளாக் ஷார்க் 5 ஆர்எஸ், பிளாக் ஷார்க் 5 ப்ரோ ஆகிய கேமிங் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பிளாக் ஷார்க் 5, பிளாக் ஷார்க் 5 ஆர்எஸ், பிளாக் ஷார்க் 5 ப்ரோ
பிளாக் ஷார்க் 5, பிளாக் ஷார்க் 5 ஆர்எஸ், பிளாக் ஷார்க் 5 ப்ரோ ஆகிய கேமிங் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிளாக் ஷார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த புதிய வரிசை சாதனங்களானது டாப் எண்ட் மாடலாக இருக்கிறது. பிளாக் ஷார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போனானது 108 எம்பி டிரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் வருகிறது.

பிளாக் ஷார்க் 5 ப்ரோ டாப் எண்ட் மாடல்
பிளாக் ஷார்ட் 5 தொடர் கேமிங் ஸ்மார்ட்போன்கள் மார்ச் 30 அன்று வெளியிடப்பட்டன. இந்த தொடரில் பிளாக் ஷார்க் 5, பிளாக் ஷார்க் 5 ஆர்எஸ், பிளாக் ஷார்க் 5 ப்ரோ ஆகிய சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தொடரில் பிளாக் ஷார்க் 5 ப்ரோ டாப் எண்ட் மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 2 முதல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கிடைக்கும். அமோலெட் டிஸ்ப்ளேக்கள், 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே மற்றும் 720 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதங்கள் உடன் கேமிங் மைய அம்சங்களை கொண்டிருக்கின்றன. கேமிங் அனுபவத்தை மேலும் மேம்படுத்த இந்த ஸ்மார்ட்போனின் தோள்பட்டை பகுதிகளில் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிளாக் ஷார்க் 5, பிளாக் ஷார்க் 5 ஆர்எஸ் மற்றும் பிளாக் ஷார்க் 5 ப்ரோ ஆகிய சாதனங்கள் வெளியீட்டு விலை மற்றும் கிடைக்கும் தன்மையை பிளாக் ஷார்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெய்போ கணக்கு மூலம் வெளியிட்டது.

பிளாக் ஷார்க் 5 சீரிஸ் விலை
வெண்ணிலா பிளாக் ஷார்க் 5 ஸ்மார்ட்போனானது மூன்று சேமிப்பக வகைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இந்திய விலை மதிப்புப்படி ரூ.33,500 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.35,800 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.39,400 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஹெவன்லி ஒயட், விண்கல் பிளாக் மற்றும் எக்ஸ்ப்ளோர் க்ரே வண்ண விருப்பத்தோடு கிடைக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்
வெண்ணிலா பிளாக் ஷார்க் 5 ஸ்மார்ட்போனானது மூன்று சேமிப்பக வகைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இந்திய விலை மதிப்புப்படி ரூ.33,500 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.35,800 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.39,400 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஹெவன்லி ஒயட், விண்கல் பிளாக் மற்றும் எக்ஸ்ப்ளோர் க்ரே வண்ண விருப்பத்தோடு கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் வண்ண விருப்பங்கள்
பிளாக் ஷார்க் 5 ஆர்எஸ் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.39,400 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.45,300 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்கை ப்ளாக், யாக்சிங் மஞ்சள் வண்ண விருப்பத்தோடு வருகிறது.

பிளாக் ஷார்க் 5 விலை
டாப் எண்க் மாடலான பிளாக் ஷார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.50100 ஆகவும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.56,100 ஆகவும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புபடி தோராயமாக ரூ.65,600 ஆக இருக்கிறது.

பிளாக் ஷார்க் 5 சிறப்பம்சங்கள்
பிளாக் ஷார்க் 5 ஸ்மார்ட்போனானது 6.67-இன்ச் சாம்சங் இ4 அமோலெட் டிஸ்ப்ளே முழு எச்டி ப்ளஸ் ஆதரவோடு 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் என மொத்தம் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4,650 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

பிளாக் ஷார்க் 5 ஆர்எஸ் சிறப்பம்சங்கள்
பிளாக் ஷார்க் 5 ஆர்எஸ் ஸ்மார்ட்போனானது 6.67-இன்ச் சாம்சங் இ4 அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது முழு-எச்டி+ (2,400x1,080 பிக்சல்கள்) தீர்மானத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது, இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் முன்புறத்தில் ஒரு செல்ஃபி கேமராவும் உள்ளது. ஸ்மார்ட்போனில் 120 வாட்ஸ் வேகமாக சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது.

பிளாக் ஷார்க் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்
பிளாக் ஷார்க் 5 ப்ரோ ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது முழு எச்டி ப்ளஸ் (2,400x1,080 பிக்சல்கள்) தெளிவுத்திறனுடன் 6.67-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு வீதம் மற்றும் 720 ஹெர்ட்ஸ் வரையிலான டச் மாதிரி வீத ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆதரவோடு வருகிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 4,650 எம்ஏஎச் பேட்டரி 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.
File Images


Click it and Unblock the Notifications