சக்திவாய்ந்த கேமிங் ஸ்மார்ட்போன்: பிளாக் ஷார்க் 4 ப்ரோ விரைவில்!

|

பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த கேமிங் ஸ்மார்ட்போனாக விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டாலும் இதுகுறித்து கசிந்த தகவல்களை பார்க்கலாம்.

பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்

பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்

பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்கள் சிறந்த கேமிங் சாதனங்களில் ஒன்றாக அறிமுகம் செய்ய உள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சமீபத்திய ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 4 இருக்கும். பிளாக் ஷார்க் 4 ப்ரோ கூகுள் ப்ளே கன்சோல் பட்டியலில் பென்ரோஸ் என்ற புனைப்பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்

பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்

கடந்த மாதமே கூகுள் ப்ளே கன்சோலில் பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன் காணப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கைசர் என்ற குறியீட்டு பெயரிலும் பட்டியலில் காணப்படுகிறது. பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வரும் எனவும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதி

இதுகுறித்த தகவல்களின்படி, பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவு

பிளாக் ஷார்க் 4 சீரிஸ் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் முன்னதாக வெளியான அறிக்கைகள் கூறுகின்றன. இதுகுறித்த விவரங்கள் வரும்நாட்களில் தெளிவுப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் உடன் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

பஞ்ச் ஹோல் கட்அவுட் டிஸ்ப்ளே

பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது பஞ்ச் ஹோல் கட்அவுட் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் 1080 x 2400 பிக்சல்கள் FHD + தெளிவுத்திறனுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கன்ட்ரோல் பட்டன்கள் இடதுபக்கத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா அம்சங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இது அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போனாக வெளியிடப்படும் என தகவல்கள் கசிந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Black Shark 4 Pro May Launching Soon in India: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X