Home
Mobile

பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ விற்பனை மார்ச் 25 முதல்.. இந்தியாவில் எப்போ அறிமுகம்?

பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் பிளாக் ஷார்க்கின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன்கள் அவற்றின் முன்னோடிகளான பிளாக் ஷார்க் 3 மற்றும் பிளாக் ஷார்க் 3 ப்ரோ போனுடன் ஒப்பிடும்போது நிறைய புதிய அம்சங்கள் மற்றும் வன்பொருள்களைக் கொண்டுள்ளது.

பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ விற்பனை மார்ச் 25 முதலா?

பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன் மேஜிக் பிளாக், ப்ளைன் பிளாக் மற்றும் ப்ளைன் சில்வர் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. இவை நான்கு ஸ்டோரேஜ் வகைகளில் விற்கப்படுகிறது. பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் படி 2,499 ஆகும். இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 27,800 ஆகும். அதேபோல், இதன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 2,699 விலையில் கிடைக்கும். இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 30,000 ஆகும்.

பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் படி 2,999 ஆகும். இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ .33,400 விலையில் கிடைக்கும். இதில் சிறந்த மாடலாக இதன் 12GB + 256 GB ஸ்டோரேஜ் மாடல் இருக்கிறது. இது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.36,700 விலையில் கிடைக்கும். அதேபோல், பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலும் ஒரே நேரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை சிஎன்ஒய் 3,999 ஆகும். இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 44,500 என்ற விலையில் கிடைக்கிறது. இதன், 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை சிஎன்ஒய் 4,499 ஆகும். இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 50,100 விலையில் கிடைக்கிறது. இதன் 16 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 5,299 ஆகும். இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 59,000 விலைக்கு கிடைக்கும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் மார்ச் 25 முதல் விற்பனைக்கு வரும்.

சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராகி வரும் இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தியில் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்பதற்கான உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், விரைவில் இந்தியச் சந்தையில் பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்று டெக் தொடர்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Black Shark 4 and Black Shark 4 Pro to go on sale from March 25 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X