இந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
நேர்த்தியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முடிவுடன் கச்சிதமான ஒரு பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜீன் 4-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.39,999-ஆக உள்ளது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி கொண்ட சியோமி பிளாக் ஷார்க் 2 சாதனத்தின் விலை
ரூ.49,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பிளாக் ஷார்க் 2
நேர்த்தியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முடிவுடன் கச்சிதமான ஒரு பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க வடிவமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், ஸ்னாப் டிராகன் 855 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய கேமிங் ஸ்மார்ட்போன் வெறும் கேமிங் ஸ்மார்ட்போனாக இல்லாமல் சிறந்த போட்டோகிராஃபி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்க வேண்டும்
என்பதற்காக 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா சேவை வழங்கப்பட்டுள்ளது

லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0
இத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இல் அறிமுகம் செய்கிறது. அதேபோல் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிளாக் ஷார்க் 2 சிறப்பம்சங்கள்:
- 6.39' முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
- அட்ரீனோ 640 ஜிபியு
- குவால்காம் ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்
-6ஜிபி ரேம் / 12 ஜிபி ரேம்
- 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 48 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 12 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- இன்பில்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார்
- ஹாண்ட்ஹெட் கிரிப்
- கேம்பேட்
- 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி


Click it and Unblock the Notifications