மிரட்டலான கேமரா காம்போவுடன் களமிறங்கும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனத்தின், புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் சீனாவில் செய்யப்படுகிறது.
சீனாவில் இன்று அதிகப்படியான புது ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. அதில் கேமர்களுக்காக பிரத்தியேக ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின், புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் சீனாவில் செய்யப்படுகிறது.

கேமர் ரசிகர்களுக்காக கேமிங் ஸ்மார்ட்போன்
கேமர் ரசிகர்களுக்காக சியோமி நிறுவனம் கடந்த ஆண்டில் பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் சியோமி பிளாக் ஷார்க் 2 மாடலை இன்று அறிமுகம் செய்கிறது.

சியோமி பிளாக் ஷார்க் 2
சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், மெல்லிய பேஸ்ஸில் மற்றும் நாட்ச் இல்லாமல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முந்தைய பிளாக் ஷார்க் மாடலில் வழங்கப்பட்ட கேமிங் பேட்களின் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போன்
நேர்த்தியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முடிவுடன் கச்சிதமான ஒரு பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க வடிவமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டபுள் காம்போ
புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், ஸ்னாப் டிராகன் 855 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய கேமிங் ஸ்மார்ட்போன் வெறும் கேமிங் ஸ்மார்ட்போனாக இல்லாமல் சிறந்த போட்டோகிராஃபி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா சேவை வழங்கப்பட்டுள்ளது.

லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0
இத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இல் அறிமுகம் செய்கிறது. அதேபோல் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு விபரம் விரைவில்
இந்த பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இன் முழு விபரம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டபின் தெரியவரும். விலை மற்றும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இன் முழு விபரங்களை அடுத்த தொகுப்பில் வழங்குகிறோம்.


Click it and Unblock the Notifications








