ஏப்ரல்: 5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் முரட்டுத்தனமான சியோமி பிளாக் ஷார்க் 2.!

இந்த ஸ்மார்ட்போனின் கேமிங் வலிமையை மேம்படுத்துவது இதன் கேம்பேட் தான்.

|

சியோமி நிறுவனம் விரைவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்நிலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் ஏப்ரல் மாதம் சியோமி பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார்
நிலையில் உள்ளது அந்நிறுவனம். மேலும் சியோமி பிளாக் ஷார்க் உலகம் முழுவதும அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி பிளாக் ஷார்க் 2.!

முதலில் இந்த சியோமி பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக தான்
இருக்கும். மேலும் பிளாக் ஷார்க் 2 சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அவற்றைப் பார்ப்போம்.

 சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.!

சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.!

அம்சங்களை பொறுத்தவரை, பிளாக் ஷார்க் 2 கேமிங் போன் ஆனது பெரும்பாலான கேமர்ஸ் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கமான பயனர்களையும் ஈர்க்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் சாம்பல் மற்றும் கறுப்பு வண்ணங்களின் கலவையில் உருவான ஒரு சன்டயல் போன்ற சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டர்போ பெர்பார்மன்ஸ் மோட்.!

டர்போ பெர்பார்மன்ஸ் மோட்.!

உடன் மிக தீவிரமான (கிராபிக்ஸ்) கேம்களை இயக்கும் போது ஸ்மார்ட்போனின் வெப்பநிலை கீழ் இஇறக்க உதவும் கூலிங்
குடெக்னலாஜியையும் கொண்டுள்ளது. மேலும் உடனடியாக ஒரு அதிவேக கேமிங் அனுபவத்தை வழங்க உதவும் டர்போ பெர்பார்மன்ஸ் மோட், சைலன்ட் அல்லது நோட்டிபிகேஷன்களை டூ நாட் டிஸ்டர்ப் முறையின் கீழ் மாற்ற உதவும் கைரேகை சென்சார் கெஸ்டர்கள் (சைகைகள்) ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் சுமார் 30 மணிநேரம்.!

சிங்கிள் சார்ஜில் சுமார் 30 மணிநேரம்.!

இந்த ஸ்மார்ட்போனின் கேமிங் வலிமையை மேம்படுத்துவது இதன் கேம்பேட் தான். ப்ளூடூத், Nintendo ஸ்விட்ச் போன்ற கூடுதல் பிஸிக்கல் கன்ட்ரோல் விருப்பங்கள் கொண்டுள்ள இந்த கேம்பேட் ஆனது ஒரு 150mAh பேட்டரி கொண்டு
சக்தியூட்டப்படுகின்றத, இது சிங்கிள் சார்ஜில் சுமார் 30 மணிநேரம் வரை உபயோகப்படுத்தப்படுகிறது. பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போனின் intelligent motion compensation technology and dark scene detailing process, மென்மையான விளையாட்டு அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.

 6ஜிபி/ 8ஜிபி ரேம் உடனான 128ஜிபி.!

6ஜிபி/ 8ஜிபி ரேம் உடனான 128ஜிபி.!

இதர அம்சங்களை பொறுத்தவரை, பிளாக் ஷார்க் 2 கேமிங் போன் ஆனது ஒரு 5.99 இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளே, 18: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம், 2160 × 1080 பிக்ஸல்கள் தீர்மானம்,550 நைட் வரையிலான பிரைட்னஸ், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 உடனான அட்ரெனோ 630 ஜிபியூ, 6ஜிபி/ 8ஜிபி ரேம் உடனான 128ஜிபி /256ஜிபி உள்ளடக்க சேமிப்பு, இரண்டு 12 மெகாபிக்சல் பின்புற கேமராக்கள், எல்இடி ப்ளாஷ் கொண்ட 20 மெகாபிக்சல்+5 மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

4000mAh பேட்டரி.!

4000mAh பேட்டரி.!

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கொண்டு இயங்கும் பிளாக் ஷார்க் கேமிங் போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ், பீடோவ், யூஎஸ்பி டைப் -சி, இரட்டை சிம் அட்டை ஆதரவு மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவைகளை
கொண்டுள்ளது. பிளாக் ஷார்க் கேமிங் போன் ஆனது ஒரு 4000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Black Shark 2 confirmed, launch expected around April: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X