Black Shark 2 இப்போது நம்பமுடியாத ரூ.20,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது! எங்கு, எப்படி இதை வாங்கலாம்?
புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் இப்பொழுது நடைபெறும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல்ஸ் விற்பனை தான் மிகவும் சரியான நேரம். ஏனென்றால் இந்த விற்பனையில் ரூ.20,000 தள்ளுபடியில் பிளாக்ஷார்க் 2 ஸ்மார்ட்போன் வாங்கக் கிடைக்கிறது. இதை எப்படி வாங்கலாம் என்று பார்க்கலாம்.

பிளாக் ஷார்க் 2
சிறப்பான கேமிங் ஸ்மார்ட்போன் மாடலாக திகழ்வது பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் மட்டும் தான். பிளாக் ஷார்க் 2 கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் கொண்ட அடிப்படை மாடல் இந்திய மதிப்பின்படி ரூ.39,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல்ஸ் விற்பனையில் நம்பமுடியாத அளவிற்கு விலை குறைப்பைப் பெற்றுள்ளது.

நம்பமுடியாத ரூ.20,000 சலுகை
இப்போது, பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் மாடல் நம்பமுடியாத ரூ.20,000 சலுகையுடன் முதல் முறையாக மிகப்பெரிய தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம் 6ஜோய் ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் இந்த சலுகையின் கீழ் கிடைக்கிறது.

பிளாக் ஷார்க் 2 வாங்க இதான் சரியான நேரம்
பிளிப்கார்ட்டில் முதல் முறையாக இந்த பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போனிற்கு ரூ.20,000 தள்ளுபடி. இதன் அசல் விளையான ரூ. 39,999 என்ற விலையிலிருந்து ரூ.20,000 குறைக்கப்பட்டு இப்பொழுது இந்த பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் வெறும் ரூ.19,999 என்ற விலையில் கிடைக்கிறது. ஷடோவ் பிளாக் நிறத்தில் இப்பொழுது சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

கூடுதல் சலுகை
இத்துடன் கூடுதல் சலுகையாக பிளிப்கார்ட் வழங்கும் சலுகையும் உள்ளது எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு வழியாக 5 சதவீதம் கேஷ்பேக் நன்மையையும் கிடைக்கிறது. இது ஒரு வரையறுக்கப்பட்ட கால விற்பனை என்பதை நினைவில் கொள்ளுங்கள், 22ம் தேதியுடன் இந்த சலுகை முடிவடைகிறது.


Click it and Unblock the Notifications