Home
Mobile

மரண ஆஃபர்.. முதல்ல ரூ.74,990.. இப்போ வெறும் ரூ.26,999 தான்.. பிரம்மாண்ட விலை குறைப்பை பெற்ற Samsung 5G போன்!

சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்று, கனவில் கூட நினைத்து பார்க்காத அளவிற்கு, மிக-மிக மலிவான விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் பழைய விலை என்ன? ஆஃபர் விலை என்ன? வேறு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S20 FE 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்த மாடல் மீது இதுவரை கண்டிராத தள்ளுபடி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மீது முழுதாக 64% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட விலை குறைப்பை பெற்ற Samsung 5G போன்!

அதாவது 128ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அசல் விலையான ரூ.74,990 க்கு பதிலாக அமேசான் வலைத்தளத்தில் வெறும் ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதன் விலையை மேலும் குறைக்கும் மற்ற சலுகைகளும் அணுக கிடைக்கின்றன.

எக்ஸ்சேன்ஜ் ஆபர் வழியாக உங்களுக்கு ரூ.25,400 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸ் கிடைக்கும். இதற்காக நீங்கள் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய வேண்டி இருக்கும். மேலும் எக்ஸ்சேன்ஜ் வேல்யூ ஆனது உங்களுடைய பழைய போனின் மாடல் மற்றும் அது வேலை செய்யும் நிலையை பொறுத்து வேறுபடும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

வங்கி சலுகைகளை பொறுத்தவரை, ஒரு பெரிய பட்டியலே உள்ளது. எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு வழியாக சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ,2000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை எச்டிஎப்சி பேங்க் டெபிட் கார்ட்டை பயன்படுத்தினால் ரூ.1200 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மாறாக எச்டிஎப்சி பேங்க் கார்டு வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனையை பயன்படுத்தினால் ரூ.1250 உடனடி தள்ளுபடி கிடைக்கும். யெஸ் பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ-யின் கீழ் 7.5% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதேபோல எச்எஸ்பிசி பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ-யின் கீழும் கூட 7.5% உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 12எம்பி ப்ரைமரி ஷூட்டர் + 12எம்பி அல்ட்ராவைடு கேமரா + 8எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இன்றளவும் சிறப்பான செயல்திறனை வழங்கும் எக்ஸினோஸ் 2100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த் சாம்சங் ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கடைசியாக இது 4500mAh பேட்டரி கொண்டுள்ளது; அது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Biggest Offer on Samsung Galaxy S20 FE 5G gets 64 Percent Direct Discount in Amazon India Website
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X