இதுவரை இல்லாத குறைந்த விலை.. Flipkart-ல் அரக்கப் பறக்க விற்பனையாகும் ஃபேமஸ் ஆன Samsung போன்!
மிகவும் பிரபலமான சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது பிளிப்கார்ட் (Flipkart) அறிவித்துள்ள பிளாட் ஆஃபரை (Flat Offer) பற்றி கேள்விப்பட்டால்.. "இதென்ன கனவா.. இல்ல நிஜம் தானா?" என்று உங்களை நீங்களே கிள்ளிப்பார்த்து கொள்வீர்கள். அதென்ன ஸ்மார்ட்போன்? அப்படி என்ன ஆஃபர்? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Samsung Galaxy S22 Plus) ஸ்மார்ட்போனை பற்றித்தான். பிளிப்கார்ட்டில் நடக்கும் வெவ்வேறு சிறப்பு விற்பனைகளின் (Special Sale) ஒரு பகுதியாக, கேலக்ஸி எஸ்22 பிளஸ் ,மாடலானது இதுவரை இல்லாத அளவில், மிகப்பெரிய தள்ளுபடியை பெற்றுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், பிளிப்கார்ட்டில் சூப்பர் வேல்யூ டேஸ் (Super Value Days) விற்பனையும் நடக்கிறது, அதே சமயம் சாம்சங் டேஸ் (Samsung Days) விற்பனையையும் நடக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போனின் மீது ரூ.35,000 என்கிற பிளாட் ஆஃபரை வழங்குகிறது!
அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.49,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த ஸ்மார்ட்போன் இந்த அளவிலான குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதே இல்லை. நினைவூட்டும் வண்ணம், இது கடந்த 2022 ஆம் ஆண்டில் ரூ.84,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சலுகை எப்போது காலாவதியாகும் என்பது தெரியவில்லை. மேலும் இந்த சலுகை பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக மட்டுமே கிடைக்கிறது. இதே சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது மற்ற ஆன்லைன் தளங்களில் ரூ.60,000 முதல் ரூ.70,000 க்குள் என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சற்றே பழைய சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ்-ஐ நம்பி வாங்கலாமா? 2022 ஆம் ஆண்டில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனை 2023 ஆம் ஆண்டின் பாதியில் நம்பி வாங்கலாமா என்கிற சந்தேகம் இருப்பின், சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 6 காரணங்கள் இதோ:
முதல் காரணம் - ரூ.35,000 பிளாட் ஆஃபர். இதுபோன்ற ஆஃபர் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான பின்பும் கூட கிடைக்காது என்றே கூறலாம். இரண்டாவது காரணம் - இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் சிறந்த கேமரா போன்களில் ஒன்றாகும்.
மூன்றாவது காரணம் - இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் (Qualcomm's Snapdragon 8 Gen 1 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது பல வகையான பிளாக்ஷிப் போன்களை இயக்குகிறது மற்றும் வேகமான மற்றும் மென்மையான செயல்திறனை வழங்கும் திறன் கொண்டது.
நான்காவது காரணம் - இது போதுமான பெரிய 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. கூடவே 45W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவும் உள்ளது. ஐந்தாவது காரணம் - இது ஐபி68 தரமதிப்பீட்டை பெற்றுள்ளது. அதாவது இது (குறிப்பிட்ட அளவிலான) நீர் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது.
ஆறாவது மற்றும் கடைசி காரணம் - இது நீண்ட கால சாஃப்ட்வேர் சப்போர்ட்டையும் (Software Support) கொண்டுள்ளது. இந்த போனிற்கு நான்கு ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி பேட்ச் கிடைக்குமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications