Home
Mobile

ரூ.10,000 ஆபர்.. 10 நிமிடங்களில் டெலிவரி.. Samsung Galaxy S25 விற்பனையில் குதித்த BigBasket.. பிப்.7 முதல்!

கடந்த மாதம் உலகளவில் அறிமுகமான, சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்25 சீரிஸ் மாடல்கள் ஆனது நாளை (பிப்ரவரி 7 ஆம் தேதி) முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இதன்கீழ் கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா என 3 மொத்தம் மாடல்கள் வாங்க கிடைக்கும்.

நாளை தொடங்கவுள்ள முதல் விற்பனைக்கு முன்னதாக கேலக்ஸி எஸ்25 சீரிஸ் மாடல்கள் ஆனது, குவிக் காமர்ஸ் தளமான பிக்பாஸ்கெட் (BigBasket) அதன் பிளாட்ஃபார்ம் வழியாக வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்திற்கு சொந்தமான பிக்பாஸ்கெட் ஆனது, சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு பிக்பாஸ்கெட் நவ் எனப்படும் தளத்தின் வழியாக அவைகளை 10 நிமிடங்களில் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

10 நிமிடங்களில் டெலிவரி.. Samsung Galaxy S25 விற்பனையில் BigBasket!

இருப்பினும், இந்த சேவை எந்தெந்த பகுதிகள் அல்லது நகரங்களில் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான விவரங்கள் இல்லை.சாம்சங்கின் புதிய கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை "மிகவும் வேகமாக" வாங்க அனுமதிப்பதுடன், பிக்பாஸ்கெட் ஆப் ஆனது எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 9 நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தையும் வழங்கும்.

பிக்பாஸ்கெட்டின் பேனர் ஒன்று -சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ஆனது ரூ.70,999 என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கும் என்று கூறுகிறது. இதன் மூலம் கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடல்களை வாங்குபவர்களுக்கு இந்நிறுவனம் (ரூ.10,000 வரையிலான) தள்ளுபடி சலுகைகளை வழங்கக்கூடும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆப்பிள் அதன் ஐபோன் 16 சீரீஸை அறிமுகம் செய்த போது தான் பிக்பாஸ்கெட் தளமானது 10 நிமிட டெலிவரிகளை அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இதேபோன்ற 10 நிமிட டெலிவரி ஆனது ஆப்பிளின் ஐபோன்களின் முக்கிய போட்டியாளர் ஆன கேலக்ஸி எஸ்25 சீரீஸ்-க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.80,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.92,999

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Plus Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.99,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,11,999

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Ultra Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,29,999
12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,41,999
12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,65,999

கேலக்ஸி எஸ்25 மற்றும் எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஐசி ப்ளூ, மின்ட், நேவி மற்றும் சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான ப்ளூ பிளாக், கோரல் ரெட் மற்றும் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும்.

கடைசியாக உள்ள கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் க்ரே, டைட்டானியம் சில்வர்ப்ளூ மற்றும் டைட்டானியம் ஒயிட்சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான டைட்டானியம் ஜேட்க்ரீன், டைட்டானியம் ஜெட்பிளாக் மற்றும் டைட்டானியம் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BigBasket to deliver Samsung Galaxy S25 series in 10 minute First India Sale on February 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X