தாராளமா வெயிட் பண்ணலாம்.. குறையே சொல்ல முடியாத பக்கா Vivo ஸ்மார்ட்போன்!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்த நிறுவனங்களில் விவோ பிரதான ஒன்று. விவோவுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. கடைக்கு சென்றால் புதிய மாடல் விவோ போன் என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள் ஏராளம். குறைந்த எடை, அழகான வடிவைமப்பு, விலைக்கேற்ற அம்சங்கள் என ஏணைய ஈர்ப்பு ஆதரவுகள் விவோ ஸ்மார்ட்போன்களில் இருக்கிறது. இந்த நிலையில் விவோவின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய கசிவு தகவல்கள்

புதிய கசிவு தகவல்கள்

Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் சமீப காலமாகவே உலா வந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் வெளியீடு நிகழ இருக்கும் நிலையில் ஸ்மார்ட்போன் குறித்த புதிய கசிவுகள் ஆன்லைன் வெளிவந்திருக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9200 எஸ்ஓசி

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 உடன் நேரடி போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எக்ஸ்90 ப்ரோ மற்றும் ப்ரோ+

விவோ எக்ஸ்90 ப்ரோ மற்றும் ப்ரோ+

வரவிருக்கும் விவோ எக்ஸ்90 சீரிஸ் இல் குறைந்தது மூன்று மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. அது வெண்ணிலா மாறுபாடு, விவோ எக்ஸ்90 ப்ரோ மற்றும் ப்ரோ+ ஆக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

கசிவுத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்போனில் இந்த அம்சங்கள் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Vivo X90 அம்சங்கள்

Vivo X90 அம்சங்கள்

TechGoing மூலமாக பிரபல டிப்ஸ்டர் டிஜிட்டல் அரட்டை நிலையத்தில் இருந்து சமீபத்திய கசிவுகள் வெளியாகி இருக்கிறது. வரவிருக்கும் விவோ ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 1.5K தெளிவுத்திறன் உடன் கூடிய AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதன் முந்தைய மாடல் ஆன விவோ எக்ஸ்80 போன்றே அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவை இந்த ஸ்மார்ட்போனும் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

வரவிருக்கும் விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனானது 4700 எம்ஏஎச் டூயல் செல் பேட்டரியைக் கொண்டிருக்கும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இது முந்தைய மாடலை விட மிகவும் மேம்பட்ட அம்சமாகும். இந்த ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் முந்தைய மாடல் உடன் ஒப்பிடும் போது இது மேம்பட்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப்செட்

Vivo X90 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த சிப்செட் ஆகும். Dimensity 9000 SoCக்கு அடுத்த ரக சிப்செட் இதுவாகும், மீடியாடெக் இந்த சிப்செட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நவம்பர் மாதம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைமன்சிட்டி 9200 சிப்செட் உடன் வரும் முதல் போன் ஆக விவோ எக்ஸ்90 இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதீத சக்தி வாய்ந்த கேமரா ஸ்மார்ட்போன்

அதீத சக்தி வாய்ந்த கேமரா ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனில் பிரதான கேமராவாக சோனி ஐஎம்எஸ்8 சீரிஸ் லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் கேமராக்கள் பல மேம்பட்ட ஆதரவுகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ மற்றும் ப்ரோ+ ஸ்மார்ட்போன்கள் அதீத சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போனாக அறிமுகமாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

Vivo X90 வெளியீடு

Vivo X90 வெளியீடு

Vivo X90 ஸ்மார்ட்போனானது சாம்சங் கேலக்ஸி எஸ்23, ஒன்பிளஸ் 11 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு பலத்து போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியானத் தகவலின்படி இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனின் கேமரா, செயலி மற்றும் டிஸ்ப்ளே ஆகிய அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலைக் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை, விரைவில் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Big Treat For Vivo Fans: Vivo X90 Launching Soon With 1.5K Resolution AMOLED Display

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X