போடு.. நினைச்சத விட ரூ.7000 கம்மி.. Moto இறக்கிய முரட்டு 5G போன்.. 12GB ரேம், OIS கேமரா, IP54 ரேட்டிங்!
எதிர்பார்க்கலல.. இவ்ளோ கம்மி விலைக்கு அறிமுகம் செய்வேன்னுனு நினைச்சுக்கூட பார்க்கலல.. என்று கூறும்படியாக மோட்டோரோலா நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான ஜி சீரீஸின் கீழ் தரமான 5ஜி ஸ்மார்ட்போனை.. மிகவும் மலிவான விலைக்கு அறிமுகம் செய்துள்ளது. நேற்று வரையிலாக இது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. இது ரூ.18,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகி உள்ளது. அதாவது நினைத்ததை விட ரூ.7000 குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ன மாடல்? என்னென்ன அம்சங்கள்? என்ன விலை? எப்போது விற்பனை? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். கடந்த மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு, சீனாவில் மோட்டோ எஸ் 50 நியோ என்கிற பெயரின்கீழ் விற்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மோட்டோ ஜி85 5ஜி என்கிற மாடல் பெயரின்கீழ் இன்று (ஜூலை 10) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள்? மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் FHD+ கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் உடனாக அட்ரெனோ 619 ஜிபியு உடன் கிராபிக்ஸ் இயங்குகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது OIS ஆதரவு உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 8எம்பி மேக்ரோ-டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது. இத ஸ்மார்ட்போன் இரண்டு வருட மென்பொருள் அப்டேட்களையும், மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் உள்ளது.
மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனில் என்ன ஸ்பெஷல்? இது கடந்த ஆண்டு வெளியாகி விற்பனையில் சக்கைபோடு போட்ட மோட்டோ ஜி84 மாடலுக்கு பின் வரும் ஸ்மார்ட்போனாகும். இரண்டிற்கும் இடையே உள்ள மேம்பாடுகளை பற்றி பேசினால், மோட்டோ ஜி84 ஸ்மார்ட்போனில் உள்ள 6.55 இன்ச் உடன் ஒப்பிடும்போது மோட்டோ ஜி85 ஆனது சற்றே பெரிய 6.67 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் 695 இல் இருந்து ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3-க்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு சிப்செட்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால், செயல்திறனில் பெரிய அளவிலான வித்தியாசத்தை நாம் எதிர்பார்க்கக்கூடாது. இதுதவிர்த்து மோட்டோ ஜி85 மாடலின் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் 33W ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் கூடுதலாக ஒரு கேமரா சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது.
என்ன விலை? இந்தியாவில் மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வாங்க கிடைக்கும். இதை கோபால்ட் ப்ளூ, அர்பன் கிரே மற்றும் ஆலிவ் கிரீன் என்கிற 3 கலர்களில் வாங்கலாம்!


Click it and Unblock the Notifications








