போடு ரூ.20,000-ஆ.. புது iPhone வாங்க சூப்பர் சான்ஸ்! ரூ.16000 விலை குறைப்பு, ரூ.4000 டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?
ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) அறிமுகமான பின்னர் பழைய ஐபோன் மாடல்களின் விலைகள் குறைக்கப்படுவது சஜகம் தான். அதற்காக இந்த அளவிற்கு குறைக்க கூடாது டா சாமி.. என்று கூறும்படியாக கடந்த ஆண்டு அறிமுகமான ஒரு ஐபோன் மாடல் மீது முழுதாக ரூ.20,000 ஆபர் கிடைக்கிறது. அதென்ன மாடல்? இந்த ஆபர் எங்கே கிடைக்கும்? இதோ விவரங்கள்;
ரூ.20,000 ஆபர் விலையின் கீழ் விற்பனை செய்யப்படுவது ஐபோன் 15 (iPhone 15) மாடல் தான். அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில், இந்த மாடலின் 128ஜிபி மற்றும் க்ரீன் கலர் வேரியண்ட் (128GB Storage, Green Color Variant) ஆனது ரூ.16000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.79,900 க்கு பதிலாக ரூ.63,900 க்கு வாங்க கிடைக்கிறது.

இது தவிர இந்த மாடலை வாங்குபவர்கள் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் (ICICI Bank credit cards) மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டுகளை (Kotak Bank credit cards) பயன்படுத்தினால் ரூ.4000 வரையிலான உடனடி தள்ளுபடியையும் (Instant Discount) பெறலாம். இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் விலையை ரூ.59,900 ஆக குறைக்கலாம். இன்னும் விலையை குறைக்க விரும்பினால் எக்ஸ்சேன்ஜ் ஆபரை (Exchange Offer) பயன்படுத்தலாம்.
அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.25,700 வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. ஒருவேளை உங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000 எக்ஸ்சேன்ஜ் போனஸ் கிடைத்தாலும் கூட (ரூ.59,900 - ரூ.15,000) ஐபோன் 15 மாடலின் இறுதி ஆபர் விலையை ரூ.44,900 க்கு கொண்டுவர முடியும்.
ஒருவேளை நீங்கள் ஐபோன் 15 மற்ற கலர் ஆப்ஷன்களை வாங்க விரும்பினால், அதாவது பிளாக், ப்ளூ மற்றும் பிங்க் கலர் ஆப்ஷன்களை (iPhone 15 Black, Blue and Pink) வாங்க விரும்பினால், தற்போது இவைகள் அமேசான் இந்தியாவில் 17% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.79,600 க்கு பதிலாக ரூ.65,900 க்கு வாங்க கிடைக்கிறது. அனைத்துமே 128ஜிபி ஸ்டோரேஜின் விலையாகும்.
ஒருவேளை நீங்கள் ஐபோன் 16 (iPhone 16) மாடலை வாங்க விரும்பினால், தற்போது இது அமேசான் இந்தியாவில் 3% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.79,900 க்கு பதிலாக ரூ.77,900 க்கு வாங்க கிடைக்கிறது. இது 128ஜிபி ஸ்டோரேஜை கொண்ட ப்ளூ கலர் ஆப்ஷனின் ஆபர் விலை ஆகும்.
நீங்கள் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடலை வாங்க விரும்பினால், தற்போது இது அமேசான் இந்தியாவில் 22% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.89,600 க்கு பதிலாக ரூ.69,900 க்கு வாங்க கிடைக்கிறது. இது 128ஜிபி ஸ்டோரேஜை கொண்ட பிளாக் கலர் ஆப்ஷனின் ஆபர் விலை ஆகும்.
ஒருவேளை நீங்கள் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடலை வாங்க விரும்பினால், தற்போது இது அமேசான் இந்தியாவில் 22% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.1,84,900 க்கு பதிலாக ரூ.1,44,900 க்கு வாங்க கிடைக்கிறது. இது 1டிபி ஸ்டோரேஜை கொண்ட நேச்சுரல் டைட்டானியம் கலர் ஆப்ஷனின் ஆபர் விலை ஆகும்.
நீங்கள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மாடலை வாங்க விரும்பினால், தற்போது இது அமேசான் இந்தியாவில் 16% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.1,54,000 க்கு பதிலாக ரூ.1,28,900 க்கு வாங்க கிடைக்கிறது. இது 256ஜிபி ஸ்டோரேஜை கொண்ட நேச்சுரல் டைட்டானியம் கலர் ஆப்ஷனின் ஆபர் விலை ஆகும்.


Click it and Unblock the Notifications








