Just In
- 4 min ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 24 min ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 26 min ago
புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் அதிரடி காட்டும் Netflix: என்னென்ன அம்சங்கள்.!
- 3 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- News
ஈரோடு மாநகராட்சியில் குறைகள் இருக்கிறது! ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்ட அமைச்சர் முத்துசாமி!
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Movies
Simbu Net worth: சிம்புவுக்கு 40 வயசாகிடுச்சு.. ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தல சுத்தது.. ரூ.11,999க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? டிச.,13 முதல் விற்பனை!
Tecno Pova 4 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மற்றும் 50 எம்பி கேமரா உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 6.82 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 6000 எம்ஏஎச் பேட்டரி என பல மேம்பட்ட ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. ரூ.10,000 விலைப் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் பிற அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

Tecno Pova 4
Tecno Pova 4 ஸ்மார்ட்போனானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக போவா 4 அறிமுகமாகி இருக்கிறது. முந்தைய மாடலைவிட பல மேம்பட்ட அம்சங்கள் இதில் இருக்கிறது. TSMC இன் 6nm செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்போன். டெக்னோ போவா 4 பேனலின் பின்புறத்தில் பளபளப்பான ஆதரவு கொண்ட டைமண்ட் கட் வடிவமைப்பு இருக்கிறது.

டூயல் ரியர் கேமரா
Tecno Pova 4 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமராக்கள் இருக்கிறது. ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. வாட்டர் டிராப் நாட்ச் ஆதரவுடன் கூடிய செல்பி ஷூட்டர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

50 எம்பி பிரைமரி கேமரா
Tecno Pova 4 ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான 6.82 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் டூயல் ரியர் கேமரா அம்சம் இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செகண்டரி ஷூட்டர் என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் கூடிய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

Tecno Pova 4 இந்திய விலை
Tecno Pova 4 ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.11,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ மற்றும் ஆஷ் வண்ண விருப்பத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய டெக்னோ ஸ்மார்ட்போனானது டிசம்பர் 13 முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
Tecno Pova 4 ஸ்மார்ட்போனானது 6.82 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1640 × 720 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரெட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தைக் கொண்டுள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் ஆதரவு கொண்ட செல்பி ஷூட்டர் இதில் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான HiOS 12 மூலம் இது இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ போவா 4 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 50 எம்பி முதன்மை கேமரா உடன் கூடிய ஏஐ லென்ஸ் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனில் 8 எம்பி ஸ்னாப்பர் வழங்கப்பட்டிருக்கிறது.

6000mAh பேட்டரி
4ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் இருக்கிறது. 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6000mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470