Home
Mobile

ரூ.30000 விலை குறைப்பு.. சரண்டர் ஆன புது Nothing போன்.. Flipkart Buy Buy 2025 சேல்.. பறக்குது ஆர்டர்!

பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது பை பை 2025 சேல் (Flipkart Buy Buy 2025 Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இன்று (டிசம்பர் 5 ஆம் தேதி) முதல் டிசம்பர் 10 வரை நடக்கும் இந்த விற்பனையில் பல வகையான ஸ்மார்ட்போன்கள் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக நத்திங் மற்றும் சிஎம்எப் ஸ்மார்ட்போன்களுக்கு வரையறுக்கப்பட்ட கால தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் போது நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் ரூ.49,999 என்கிற தொடக்க விலையில் கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இது ரூ.79,999 க்கு அறிமுகமானது; (ரூ.30000 விலை குறைப்பு).

ரூ.30000 விலை குறைப்பு.. சரண்டர் ஆன புது Nothing போன்!

இதேபோல் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) ஸ்மார்ட்போனானது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.21,999 முதல் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,999 க்கு விற்கப்படும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.27,999 ஆகும்

சிஎம்எப் பிராண்டட் ஸ்மார்ட்போன்களின் மீதான ஆபர்களை பொறுத்தவரை சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro)ஸ்மார்ட்போனானது ரூ.18,999 க்கு பதிலாக ரூ.17,499 என்கிற தொடக்க விலையில் வாங்க கிடைக்கும். சிஎம்எப் ஸ்மார்ட்போன்களை தவிர, சிஎம்எப் ஆடியோ மற்றும் வியரிப்பிள்ஸ் மீதும் ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிஎம்எப் பட்ஸ் 2ஏ (CMF Buds 2a) ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்ஸ் ஆனது ரூ.1,899 க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.2,199 ஆகும். இதேபோல சிஎம்எப் பட்ஸ் 2 (CMF Buds 2) மாடல் ஆனது அதன் அறிமுக விலை ஆன ரூ. 2,699 க்கு பதிலாக ரூ.2,399 க்கு வாங்க கிடைக்கும்.

இதேபோல சிஎம்எப் பட்ஸ் 2 பிளஸ் (CMF Buds 2 Plus) ஆனது ரூ. 3,299 க்கு பதிலாக ரூ.2,599 க்கு விற்கப்படும். கடைசியாக டிசம்பர் 7 ஆம் தேதி வரை சிஎம்எப் வாட்ச் 2 ப்ரோ (CMF Watch Pro 2) ஆனது அதன் அசல் விலையான ரூ.4,999 க்கு பதிலாக ரூ.4,199 என்கிற தள்ளுபடி விலையில் கிடைக்கும். மேற்கண்ட (மீதமுள்ள) நத்திங் மற்றும் சிஎம்எப் தயாரிப்புகளின் மீதான ஆபர்கள் டிசம்பர் 10 வரை கிடைக்கும்.

லேட்டஸ்ட் ஆக அறிமுகமான நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Big Discounts on Nothing Phone 3 Phone 3a Pro in Flipkart Buy Buy 2025 Sale Un till December 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X