ஆளுக்கு 2 ஆர்டர்.. ஏப்.13 குள்ள வாங்கினால். ரூ.5599 க்கு 4G போன், ரூ.9299 க்கு 5G போன், ரூ.799 க்கு மொபைல்!
லாவா (Lava) நிறுவனம் அதன் பல தரப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்கள், 5ஜி ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் போன்கள் மீது தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக லாவா டேஸ் (Lava Days) என்கிற சிறப்பு விற்பனையை நடத்துகிறது.
இந்த லாவா டேஸ் விற்பனையானது இன்று (அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி) தொடங்கி வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி வரை என மொத்தம் 4 நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 7 லாவா ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2 லாவா பீச்சர் மொபைல் போன்கள் என மொத்தம் 9 மாடல்கள், குறைக்கப்பட்ட ஆபர் விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது: இதோ லிஸ்ட்:

1. லாவா போல்ட் 5ஜி (Lava Bold 5G): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் லாவா டேஸ் விற்பனையின் கீழ் லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.16,999 க்கு பதிலாக ரூ.10,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: ஓஎஸ்-ஐ பொறுத்தவரை லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. ஆனால் இது ஆண்ட்ராய்டு 15 க்கு மேம்படுத்தப்பட்டு, இரண்டு வருட செக்யூரிட்டி பேட்ச்களை பெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் 3டி கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட்டில் இயங்குகிறது.
சுவாரசியமாக விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன், பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி இன்டர்னல் ரேம்-ஐ 8ஜிபி வரை விரிவாக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64-மெகாபிக்சல் சோனி சென்சார் உடனான ஏஐ ஆதரவு கொண்ட ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்ளுக்கு, இது 16-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி 64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கடைசியாக லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.
2. லாவா அக்னி 3 (Lava Agni 3): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் லாவா டேஸ் விற்பனையின் கீழ் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.27,999 க்கு பதிலாக ரூ.18,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, குவாட் ரியர் கேமரா செட்டப் (Quad Rear Camera Setup), அதில் 50எம்பி ப்ரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் ஆட்டோஃபோகஸ் உடனான டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸர் (MediaTek Dimensity 7050 SoC) கொண்டு இயங்கும் லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி வழக்கமான ரேம் மற்றும் 8ஜிபி விர்ச்சுவல் ரேம் (8GB Virtual RAM) உடன் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 4700எம்ஏஎச் பேட்டரியை (4700mAh Battery) கொண்டுள்ளது.
3. லாவா பிளேஸ் டூயோ 5ஜி (Lava Blaze Duo 5G): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் லாவா டேஸ் விற்பனையின் கீழ் லாவா பிளேஸ் டூயோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.20,499 க்கு பதிலாக ரூ.15,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
4. லாவா ஓ3 ப்ரோ (Lava O3 Pro): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் லாவா டேஸ் விற்பனையின் கீழ் லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.8,399 க்கு பதிலாக ரூ.6,799 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 X 720 பிக்சல்ஸ் ரெசல்யூசன் மற்றும் செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது யுனிசாக் டி606 ஆக்டாகோர் அப்செட் (Unisoc T606 octa-core chipset) மூலம் இயக்கப்படுகிறது. லாவா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிப்செட் ஆனது அன்டுடு (AnTuTu) பெஞ்ச்மார்க்கில் 2.3 லட்சத்திற்கும் அதிகமான பாயிண்ட்களை பெற்றுள்ளது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை இந்த சிப்செட் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறந்த மல்டி டாஸ்கிங்கிற்காக இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவும் உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்புறத்தில் உள்ள 8எம்பி கேமரா பார்த்துக்கொள்ளும். பேட்டரியை பொறுத்தவரை இது 10W ஸ்டாண்டர்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் ஆதரவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது.
5. லாவா பிளேஸ் 3 5ஜி (Lava Blaze 3 5G): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் லாவா டேஸ் விற்பனையின் கீழ் லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.12,999 க்கு பதிலாக ரூ.10,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
6. லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் லாவா டேஸ் விற்பனையின் கீழ் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.12,499 க்கு பதிலாக ரூ.9,299 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720x1600 பிக்சல்ஸ் உடனான 6.56 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது செல்பீ கேமராவிற்கான ஹோல் பஞ்ச் கட்அவுட் உடனான 2.5டி கர்வ்டு டிஸ்பிளே ஆகும்..
சிப்செட்டை பொறுத்தவரை லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 0.08-மெகாபிக்சல் செக்ண்டரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் ஸ்கிரீன் ஃபிளாஷ் ஆதரவு உடனான 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கடைசியாக 5ஜி ஆதரவு, 4ஜி ஆதரவு, ப்ளூடூத், எஃப்எம் ரேடியோ, வைஃபை 802.11 பி/ஜி/என்/ஏசி, ஓடிஜி, 3.5மிமீ ஆடியோ ஜாக், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
7. லாவா ஓ3 (Lava O3): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் லாவா டேஸ் விற்பனையின் கீழ் லாவா ஓ3 ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.7,199 க்கு பதிலாக ரூ.5,599 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
8. லாவா ஹீரோ சக்தி 2025 (Lava Hero Shakti 2025): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் லாவா டேஸ் விற்பனையின் கீழ் லாவா ஹீரோ சக்தி 2025 பீச்சர் மொபைல் ஆனது, அதன் அசல் விலையான ரூ.8,99 க்கு பதிலாக ரூ.799 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
9. லாவா ஜெம் 2025 (Lava Gem 2025): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் லாவா டேஸ் விற்பனையின் கீழ் லாவா ஜெம் 2025 ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.2,099 க்கு பதிலாக ரூ.1,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications