OnePlus முதல் Redmi வரை.. 1 இல்ல 2 இல்ல.. மொத்தம் 11 போன்கள் மீது அபார ஆஃபர்.. அதிரும் Amazon Summer Sale!
அமேசானின் கிரேட் சம்மர் சேலின் (Amazon Great Summer Sale) பொது விற்பனையானது மே 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கும், அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கான (Prime Members) முன்கூட்டிய அணுகலானது (Early Access) மே 3 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும் தொடங்க உள்ளது.
இதற்கிடையில், அமேசானின் இந்த சிறப்பு விற்பனையின் போது, எந்தெந்த பிராண்டுகளின் 5ஜி மற்றும் 4ஜி போன்கள் மீது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும் என்கிற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவைகளில் பெஸ்ட் மொபைல் டீல்ஸ் (Best Mobile Deals) என்று நாங்கள் கருதும் 11 போன்களின் பட்டியல் இதோ:

01. சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G): இது வங்கி சலுகைகளுடன் சேர்த்து ரூ.12,490 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.14,990 ஆகும். அறிமுகமான நாளில் இருந்து ரூ.15,000 க்கு கீழ் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி போன் (Best 5G Phone Under Rs.15,000) ஆக திகழ்கிறது.
02. ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14): அமேசான் வலைத்தளத்தின்படி, எல்லா வகையான சலுகைகளையும் (பேங்க் ஆஃபர், கேஷ்பேக், எக்ஸ்சேன்ஜ்) பயன்படுத்தும் பட்சத்தில் இதை ரூ.39,293 க்கு வாங்க முடியும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 14 மாடலின் அசல் விலை ரூ.79,900 ஆகும்.
03. சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் (Samsung Galaxy S23 Plus): 2023 ஆம் ஆண்டின் பெஸ்ட் 5ஜி பிளாக்ஷிப் போன்களில் (Best 5G Flagship Smartphone) ஒன்றான இது அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கும்.
04. சியோமி 12 ப்ரோ (Xiaomi 12 Pro): அமேசானின் இந்த சம்மர் சேலின் கீழ் நீங்கள் வாங்கக்கூடிய மற்றொரு நல்ல ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இது இருக்கும். மூன்று 50எம்பி கேமராக்கள் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராஸாருடன் வரும் இந்த போன் ரூ.42,999 என்கிற ஆஃபர் விலையின் கீழ் வாங்க கிடைக்கும்.
05.ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro): இது ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம், இது 48எம்பி + 50எம்பி + 8எம்பி என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி, 6.7-இன்ச் க்யூஎச்டி பிளஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
06. ஒன்பிளஸ் 10ஆர் (OnePlus 10R): ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரூ.29,999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்குமென்று அமேசான் அறிவித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.31,999 ஆகும்.
07. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G): கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இது அமேசானின் சம்மர் சேலின் போது ரூ.15,249 க்கு வாங்க கிடைக்கும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 ப்ராசஸர், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே போன்றவைகளை கொண்டுள்ளது.
08. ரியல்மி நார்சோ 50 ப்ரோ (Realme Narzo 50 Pro): டைமன்சிட்டி 920 சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.4-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,749 க்கு வாங்க கிடைக்கும்.
09. ஐக்யூ நியோ 6 (iQOO Neo 6): குவால்காமின் சிறந்த சிப்செட்களில் ஒன்றான ஸ்னாப்டிராகன் 870 உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், அமேசானின் சம்மர் சேல் 2023-யின் போது ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கும். இது GW1P சென்சார் உடனான 64எம்பி OIS மெயின் கேமராவையும் கொண்டுள்ளது.
10. ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி (iQOO Z6 Lite 5G): இதுவும் ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது அமேசானின் சிறப்பு விற்பனையின் போது ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கும். முக்கிய அம்சங்களை பொறுத்தவை ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 ப்ராசஸர், 120ஹெர்ட்ஸ் FHD+ டிஸ்பிளே, 50எம்பி ஐ ஆட்டோஃபோகஸ் கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.
11.ஐக்யூ நியோ 7 (iQOO Neo 7): இது அமேசான் விற்பனையின் போது, வங்கி சலுகையுடன் சேர்த்து ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கும். இது 64எம்பி + 2எம்பி + 2எம்பி என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 5000mAh பேட்டரி, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








