யாருமே இதை எதிர்பார்க்கல.. முழுசா ரூ.15,000 விலை குறைப்பு.. அதுவும் இந்த Samsung போன் மீது.. வாவ்!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது நேரடியாக ரூ.15,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? வேறென்ன சலுகைகள் கிடைக்கிறது? இந்த ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்?
என்ன மாடல்? அது சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) மாடலாகும். அமேசானில் தற்போது இது குறைக்கப்பட்ட விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. 2024 ஆம் ஆண்டின் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்.

ஏனென்றால், அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு இ-காமர்ஸ் வலைத்தளங்களும், தங்களது அடுத்த சிறப்பு விற்பனைகளை எப்போது நடத்தும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. அது தெரிந்தாலாவது.. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவை அப்போது வாங்கி கொள்ளலாம் என்று காத்திருக்கலாம்.
அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? அமேசானின் விலை பட்டியலானது, சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மீது 27% தள்ளுபடியை வழங்குவதாக கூறுகிறது. ஆனால் அது எம்ஆர்பி விலைக்கான (ரூ.1,49,999) தள்ளுபடி விகிதமாகும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.1,24,990 க்கு தான் அறிமுகமானது.

அதை வைத்து பார்க்கும் போது சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மீது நேரடியாக ரூ.14,991 தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது அமேசானில் இது ரூ.1,09,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். ஒருவேளை நீங்கள் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்க விரும்பினால் அது ரூ.1,19,999 க்கு கிடைக்கும்.
நேரடி தள்ளுபடி தவிர்த்து ஒன்கார்டு கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1750 உடனடி தள்ளுபடியும், மற்றும் நான்-இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.ரூ.1250 தள்ளுபடியும் கிடைக்கும். உங்களிடம் அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு இருந்தால், உங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் அணுக கிடைக்கும்.

நம்பி வாங்கலாமா? அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 9 மாதங்களுக்குப் பிறகும், எஸ்23 அல்ட்ராவானது, சந்தையில் கிடைக்கும் பெஸ்ட் கேமரா போனாக திகழ்கிறது. இதன் கேமரா செட்டப்பில், 200எம்பி மெயின் சென்சார் + 12எம்பி அல்ட்ராவைடு சென்சார் + 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10எம்பி டெலிஃபோட்டோ சென்சார் + 10x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 10எம்பி பெரிஸ்கோப் கேமரா உள்ளது.
மேலும் எஸ்23 அல்ட்ராவானது கண்களை ஈர்க்கும் 6.8-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சாம்சங் இதை டைனமிக் AMOLED 2X பேனல் என்று அழைக்கிறது. இது நம்பமுடியாத அளவிற்கு பிரகாசமானதாக மற்றும் தெளிவானதாக இருக்கிறது. மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 பிளஸ் போன்றவைகளையும் ஆதரிக்கிறது.
இப்போதைக்கு பெரும்பாலான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கின்றன. எஸ்23 அல்ட்ரா மாடல் ஆண்டு இதற்கு முந்தைய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2-வை பேக் செய்கிறது. இப்போதும் கூட இந்த சிப்செட் மிகவும் வேகமான மற்றும் சக்திவாய்ந்த சிப்செட் ஆக திகழ்கிறது.
கடைசியாக கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவை வாங்குவதற்கு எஸ் பென் ஸ்டைலஸ் ஒரு முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். இது குறிப்புகளை எடுப்பது, வரைதல் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல்துறை கருவியாகும். ஒருவேளை நீங்கள் லேட்டஸ்ட் எஸ்24 அல்ட்ராவை வாங்க விரும்பினால் பிளிப்கார்ட் வழியாக, இது ரூ.1,29,999 முதல் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








