நோக்கியா 2 மற்றும் நோக்கியா 3-க்கு ரூ.2000/- கேஷ்பேக்: பெறுவது எப்படி.?

|

இதை தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களிடம் இருந்து கிடைக்கும் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கான கேஷ்பேக் மழைக்காலம் என்றே கூறலாம். ஒருபக்கம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் புட்பால் கேஷ்பேக் சலுகையை வழங்கி கொண்டிருக்க, மறுகையில் ஐடியா செல்லுலார் அதன் பானாசோனிக் ஸ்மார்ட்போன் மீதான கேஷ்பேக் சலுகையை இன்று அறிவித்தது.

இந்நிலைப்பாட்டில், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது மேரா பெலா ஸ்மார்ட்போன் வாய்ப்பை, நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்துடன் இணைந்து விரிவுபடுத்தியுள்ளது.

ரூ.2000/- என்கிற கேஷ்பேக்

ரூ.2000/- என்கிற கேஷ்பேக்

இதன்கீழ் பார்தி ஏர்டெல் நிறுவனமானது, எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் ஆரம்பகட்ட வெளியீடுகளான நோக்கியா 2 மற்றும் நோக்கியா 3 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2000/- என்கிற கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

ரூ.6,999/-க்கு பதிலாக ரூ.4,999/-க்கு

ரூ.6,999/-க்கு பதிலாக ரூ.4,999/-க்கு

ஆக இந்த வாய்ப்பின் கீழ், நோக்கியா 2 ஸ்மார்ட்போனை ரூ.6,999/-க்கு பதிலாக ரூ.4,999/-க்கும் மற்றும் நோக்கியா 3 ஸ்மார்ட்போனை ரூ.9,499/-க்கு பதிலாக ரூ.7,499/-க்கும் வாங்கலாம். இந்த வாய்ப்பு ஏற்கனவே அமலாகிவிட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

உடனடியாக கிடைக்காது

உடனடியாக கிடைக்காது

ஏர்டெல் வழங்கிய முந்தைய 4ஜி கேஷ்பேக் சலுகையைப் போலவே, இந்த கேஷ்பேக் சலுகையானதும் உடனடியாக கிடைக்காது. மாறாக கேஷ்பேக்கை பெற மொத்தம் 36 மாதங்களுக்கு ரிச்சார்ஜ் செய்ய வேண்டும். அந்த 36 மாதங்களில் இரண்டு தவணைகளில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.

இரண்டாம் தவணையின் கீழ் ரூ.1500/- கேஷ்பேக்

இரண்டாம் தவணையின் கீழ் ரூ.1500/- கேஷ்பேக்

அதாவது ஒரு வாடிக்கையாளர் ரூ.500/- என்கிற முதல தவணை கேஷ்பேக்கை பெற முதல் 18 மாதங்களுக்கு ரூ,3500/- மதிப்பிலான ரீசார்ஜ்களை செய்ய வேண்டும் அதே போல அடுத்த 18 மாதங்களில் ரூ.3,500/- மதிப்பிலான ரீசார்ஜ் செய்ய இரண்டாம் தவணையின் கீழ் ரூ.1500/- கேஷ்பேக் கிடைக்கும்.

நோக்கியா 2

நோக்கியா 2

அம்சங்களை பொறுத்தமட்டில், நோக்கியா 2 ஆனது 2017 இறுதியில் வெளியான ஸ்டாக் ஆண்ட்ராய்டு7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் உறுதிபெற்ற ஒரு ஸ்மார்ட்போனாகும். ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் க்வால்காம் ஸ்னாப் 212 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி அளவிலான உள் சேமிப்பு கொண்டுள்ளது. நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமானது அதன் வடிவமைப்பு ஆகும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
நோக்கியா 3

நோக்கியா 3

நோக்கியா 3 பற்றி பேசுகையில், இது ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த முதல் நோக்கியா ஸ்மார்ட்போன் ஆகும். இது ஒரு 5 அங்குல எச்டி டிஸ்ப்ளே மற்றும் ஒரு மீடியா டெக் எம்டி6737 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு 2630எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் நோக்கியா 3 ஆனது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பு கொண்டுள்ள, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் உறுதிபெற்ற ஒரு ஸ்மார்ட்போனாகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bharti Airtel and HMD Global Partnered to Offer Rs 2,000 Cashback on Nokia 2 and Nokia 3 Smartphones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X