சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு

சாம்சங் ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் எந்த லிங்கையும் கிளிக் செய்வதற்கு முன்பு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மொபைல்களுக்கான பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில் சாம்சங் ஸ்மார்ட்போன்களை வெளியிலிருந்து மிக எளிதாக முடக்கி வைக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அதன் மூலம் விஷமிகள் ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா டேட்டாக்களையும் வெளியிலிருந்தே அழித்துவிட முடியும் என்று கருதுகின்றனர். குறிப்பாக ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் உள்ள தகவல்களை ஒரு வரி கோட் மூலம் அழிக்க முடியும் என்று ஒரு இணையதள தகவல் கூறுகிறது.
கேலக்ஸி பீம், எஸ் அட்வான்ஸ், கேலக்ஸி ஏஸ் மற்றும் கேலக்ஸி எஸ் II போன்ற ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இதுபோன்ற விஷமிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று நம்பகமான தகவல் தெரிவிக்கின்றது. மேற்சொன்ன சாதனங்கள் அனைத்து்ம சாம்சங்கின் டச்விஸ் யூசர் இன்டர்பேஸைக் கொண்டிருக்கின்றன.
எனவே சாம்சங்கின் டச்விஸ் சாப்ட்வேரைக் கொண்டிருக்கும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களே பெரிதும் பாதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதை ரவி போர்கன்கர் என்ற ஆய்வாளரும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
எனவே சாம்சங் ஆன்ட்ராய்டு போனை வைத்திருப்பவர்கள் சற்று உஷாராக இருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications