ஆன்ட்ராய்டு போன்களுக்கான 'வெப் பிரவ்சர்கள்'
ஆன்ட்ராய்டு போன்கள் என்றாலே சிறப்பானவை மற்றும் அதிக செயல்திறன் கொண்டவையே. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் செயல்பாடும் பிரம்மிக்கும் வகையில் இருக்கும்.
அதிலும் ஆன்ட்ராய்டு ஓஎஸ்-ஆனது கூகுள் நிறுவனத்தால் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இந்த இயங்குதளத்தில் நமக்கு தேவையான அப்ளிகேசன்களை கூகுள் ப்ளேயிலிருந்து இலவசமாகவும் பணம் செலுத்தியும் பெறமுடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
நம்மில் அனைவரும் இணையத்தை பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துகிறோம். நமது மொபைல் போனிலிருந்து இணையத்தை பெறுவதற்கு 'வெப் பிரவ்சர்கள்' என அழைக்கப்படும் இணைய உலவிகள் பயன்படுகின்றன.
இந்த வெப் பிரவ்சர்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் நாமும் நல்ல இணைய பயன்பாட்டை பெறமுடியும். இதற்காக பல்வேறு சிறந்த உலவிகள் இணையத்தில் இலவசமாகவும், விலைகொடுத்து வாங்கும் வகையிலும் உள்ளன.
நமது இணையதளம் சில சிறந்த இணைய உலவிகளை இங்கே வரிசைப்படுத்தியுள்ளது. இவற்றை நீங்கள் இலவசமாகவே தரவிறக்கம் செய்யமுடியும். மேலும் விவரங்கள் கீழே!

ஒபேரா மினி வெப் பிரவ்சர்:
விரைவான இன்டர்நெட் பயன்பாட்டை நீங்கள் பெறவேண்டுமெனில் உடனே இந்த உலவியை தரவிறக்கம் செய்யுங்கள். மொபைல் போன்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் இந்த அப்ளிகேசன் இலவசமாகவே கிடைக்கிறது.

ஸ்கை வெப் பிரவ்சர் 4.0:
இது மற்றுமொரு சிறந்த இணைய உலவியாகும். இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. இதை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு,
- ஃபிளாஷ் வீடியோ வசதி,
- ஃபேஸ்புக்கை எளிதில் பெறலாம்,
- செய்திகளை பெறுவதும் எளிதே,
- ஒன்டச் வசதி,
- டால்பின் FM,
- புக்மார்க் செய்வது எளிது,
- டால்பின் வழங்கும் யூடியூப் சர்ச்,
- விக்கிபீடியாவில் தேடலாம்,
- அலெக்ஸா ரேங் கூட பார்க்க முடியம்.
- எளிமையான வடிவமைப்பு,
- கூகுளிலிருந்து புக்மார்க்களை ஏற்றம் செய்யலாம்,
- திரையில் உள்ளதை அப்படியே படம் எடுக்கலாம்,
- இதிலிருந்து கோப்புகளை தேடுவதும் எளிதே.
- ஈமெயில் மற்றும் ஜிப் என்ற தரவு வகையையும் தேடுவது எளிதே!

டால்பின் வெப் பிரவ்சர்:
இந்த வெப் பிரவ்சரானது பயன்படுத்துவதற்கு எளிதானது மற்றும் வேகமானது. இந்த மென்பொருளை ஆன்ட்ராய்டு ஸ்டோரிலிருந்து எளிதாக டவுன்லோட் செய்யலாம். இதன் சிறப்பம்சங்களாவன,

எக்ஸ்-ஸ்கோப் உலவி,
இந்த சிறந்த உலவியானது பயன்படுத்துவதற்கு மிகவும் எல்;எளிதானது. இதுதான் ஆன்ட்ராய்டு ஸ்டோரில் கிடைக்கும் முதல் 'மல்ட்டி டச்' உலவி.

UC பிரவ்சர்:
அதிக அளவில் பயன்படுத்தப்படும் செல்போனுக்கான வெப் பிரவ்சர். இது மிகவிரைவில் தகவல்களை தரக்கூடியது. நீங்கள் அதிகமாக பார்த்த இணையதளங்கள் முன்பக்கத்தில் காட்டப்படும்.


Click it and Unblock the Notifications