ஆண்ட்ராய்டு டூ ஐஓஎஸ் தரவுகளை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

|

ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ் சாதனங்களுக்கு தரவுகளை பரிமாற்றம் செய்வது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறிவிட்டது. அனைத்து தரவுகளையும் ஆண்ட்ராய்டு டூ ஐஓஎஸ் மற்றும் ஐஓஎஸ்-இல் இருந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு பரிமாற்றம் செய்வது எளிமையான காரியமாகி விட்டது.

ஆண்ட்ராய்டு டூ ஐஓஎஸ் தரவுகளை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

இங்கு ஐஓஎஸ் இயங்குதளத்தில் இருந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு தரவுகளை பரிமாற்றம் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஐஓஎஸ் செயலிக்கு மாற்றவும்

ஐஓஎஸ் செயலிக்கு மாற்றவும்

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப்பிளின் முவ் டூ ஐஓஎஸ் ஆப் (Move to ios app) கொண்டு போட்டோ, காலெண்டர், காண்டாக்ட், டெக்ஸ்ட் மெசேஜ், வீடியோக்களை எளிமையாக பரிமாற்றம் செய்ய முடியும்.

எனினும் செயலி, பாடல்கள் மற்றும் பாஸ்வேர்டுகளை பரிமாற்றம் செய்ய முடியாது. இந்த செயலி ஆணட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களில் கிடைப்பதோடு ஐஓஎஸ் 9 அல்லது அதற்கும் அதிகமான சாதனங்களுக்கு பிரமாற முடியும்.

கூகுள் செயலிகள்

கூகுள் செயலிகள்

கூகுள் செயலிகளில் பேக்கப் செய்யும் வழக்கம் கொண்டவர் எனில், போட்டோ மற்றும் இதர தகவல்கள் அனைத்தையும் பரிமாற்றம் செய்வது மிகவும் எளிமையைான ஒன்றாகும். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஜிமெயில், போட்டோஸ், கூகுள் க்ரோம் போன்ற செயலிகளை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

ஷேர் இட்

ஷேர் இட்

தகவல்களை பரிமாற்றம் செய்ய அதிகம் பரிந்துரை செய்யப்படும் சேவை இது. ஒற்றை புகைப்படத்தில் இருந்து அனைத்து தரவுகளையும் பரிமாற்றம் செய்ய முடியும். இதற்கு இண்டர்நெட் இணைப்பு தேவைப்படாது என்றாலும் வைபை இணைப்பை ஆன் செய்ய வேண்டும். கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும்.

பாஸ்ட்பைல் டிரான்ஸ்பர்

பாஸ்ட்பைல் டிரான்ஸ்பர்

இந்த செயலி ஆண்ட்ராய்டு சாதனத்தில் லோக்கல் வைபை நெட்வொர்க் ஒன்றை உருவாக்கி அதிக மெமரி கொண்ட தரவுகளை பரிமாற்றம் செய்யும். தரவுகளை மிக எளிமையாக பரிமாற்றம் செய்ய இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்ஸ்டாஷேர்

இன்ஸ்டாஷேர்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் கிடைக்கும் இந்த செயலி ஆப்பிளின் ஏர்டிராப் சேவையை சார்ந்து வடிவமைக்கப்பட்டது. தரவுரளை கிளிக் செய்து அருகாமையில் உள்ள காண்டாக்ட்களில் டிராப் செய்து தரவுகளை பிரமாற முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Previously, it is used to be a pain to transfer data from an Android device to iOS. But now, it is easier than ever. Check out the ways to transfer the data here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X