Home
Mobile

ரூ.15,000-க்குள் கிடைக்கும் அசத்தலான விவோ போன்கள்: இதோ பட்டியல்.!

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அருமையான கேமரா வசதியுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

விவோ நிறுவனம்

விவோ நிறுவனம்

அதேபோல் விவோ நிறுவனம் சமீபத்தில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. விரைவில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகும் என்பதால் இந்நிறுவனம் 5ஜி போன்களை அதிகமாக அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்குவருவோம். அதாவது இந்தியாவில் ரூ.15,000-க்குள் கிடைக்கும் அசத்தலான விவோ போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

1.விவோ டி1 44W

1.விவோ டி1 44W

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ டி1 44W ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அதேபோல் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன். மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் ப்ளாஷ் சார்ஜ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ டி1 44W கேமரா

விவோ டி1 44W கேமரா

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி bokeh கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ டி1 44Wமாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.

2.விவோ U20

2.விவோ U20

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ U20 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,000-விலையில் வாங்க முடியும். குறிப்பாக விவோ U20 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6.53-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 x 2340 பிக்சல்ஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன். மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது விவோ U20
ஸ்மார்ட்போன்.

விவோ U20 கேமரா

விவோ U20 கேமரா

விவோ U20 ஸ்மார்ட்போன் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

3.விவோ Y21G

3.விவோ Y21G

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y21G ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மீடியாடெக் 6769 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த விவோ Y21G ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4. விவோ Y21

4. விவோ Y21

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y21 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,585-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி secondary சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

விவோ Y21 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியை கொண்டுள்ளது இந்த அசத்தலான
விவோ போன்.

விவோ Y21 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 5. விவோ வி20 எஸ்இ

5. விவோ வி20 எஸ்இ

அமேசானில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போன் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமரா, 4100எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Best Vivo Phones Under Rs 15,000: Here's the List: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X