ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.20,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த Vivo 5ஜி போன்கள்.. 50எம்பி கேமரா.. பட்டியல் இதோ..
விவோ (vivo) ஒவ்வொரு மாதமும் அசத்தலான 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட அசத்தலான கேமரா மற்றும் தனித்துவமான வடிவமைப்பு கொண்ட போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் ரூ.20,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த விவோ5 ஜி போன்களை இங்கே பார்க்கலாம்.
விவோ டி3எக்ஸ் 5ஜி (vivo T3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,985 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட், 6000mAh பேட்டரி, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.

விவோ டி4எக்ஸ் 5ஜி (vivo T4x 5G) ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த போன் 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே உடன் இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் 6500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட், MIL-STD-810H - மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance), IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனில் உள்ளன.
விவோ ஒய்39 5ஜி (Vivo Y39 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2) உடன் இந்த விவோ போன் வெளிவந்தது. மேலும் 6.68-இன்ச் எல்சிடி டிஸ்பிளே இதில் உள்ளது. அதேபோல் பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.
50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா,IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), 6500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) போன்ற அம்சங்கள் இந்த விவோ ஒய்39 5ஜி போனில் உள்ளன.
விவோ டி4ஆர் 5ஜி (vivo T4R 5G) போன் ஆனது ரூ.19,499 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. பின்பு மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset)வசதி இந்த போனில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.

IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 5700mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது விவோ டி4ஆர் 5ஜி போன்
விவோ ஒய்200இ 5ஜி (vivo Y200e 5G) ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கு வாங்க கிடைக்கிறது. 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 16எம்பி செல்பி கேமரா, 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (FHD+ AMOLED), ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்உள்ளிட்ட அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications