Home
Mobile

2025-ல் வெளிவந்த மிரட்டலான Vivo 5ஜி போன்கள்.. IP69 ரேட்டிங்.. 7300mAh பேட்டரி.. இதோ பட்டியல்..

சியோமி, மோட்டோ, ஒப்போ போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த 2025-ம் ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது விவோ நிறுவனம். குறிப்பாக இந்த விவோ நிறுவனம் அறிமுகம் செய்த ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த 2025-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த பட்ஜெட் விலை விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

2025-ல் வெளியான மிரட்டலான Vivo 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

விவோ டி4எக்ஸ் 5ஜி (vivo T4x 5G) ஸ்மார்ட்போன் 2025-ல் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,499 விலையில் வாங்க கிடைக்கிறது. 6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், டைமன்சிட்டி 7300 5ஜி சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 6.72-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்தது.

விவோ டி4ஆர் 5ஜி (Vivo T4R 5G) ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த விவோ போன் ரூ.20,999-க்கு வாங்க கிடைக்கிறது. 6.77-இன்ச் டிஸ்பிளே, டைமன்சிட்டி 7400 5ஜி சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 5700mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 44W ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

விவோ ஒய்31 5ஜி (vivo Y31 5G) கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வங்கி சலுகைகளுடன் சேர்த்து இந்த போனை ரூ.13,999 விலையில் வாங்கலாம். 6500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.68-இன்ச் டிஸ்பிளே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ஐபி69 ரேட்டிங் போன்ற அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது.

2025-ல் வெளியான மிரட்டலான Vivo 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

விவோ ஒய்31 ப்ரோ 5ஜி (vivo Y31 Pro 5G) மாடலும் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த விவோ போன் ரூ.18,999 விலையில் வாங்க கிடைக்கிறது. டைமன்சிட்டி 7300 சிப்செட், 6500mAh பேட்டரி, 6.72-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

விவோ டி4 லைட் 5ஜி (vivo T4 Lite 5G) ஸ்மார்ட்போன் 2025-ல் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த விவோ ரூ.11,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஐபி64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

2025-ல் வெளியான மிரட்டலான Vivo 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

விவோ ஒய்400 5ஜி (vivo Y400 5G) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த விவோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 6.67-இன்ச் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா ஸ்னாப்டிரகன் 4 ஜென் 2 சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ஐபி69 ரேட்டிங், 90W சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

விவோ டி4 5ஜி (vivo T4 5G) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் வங்கி சலுகைகளுடன் சேர்த்து ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 7300mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 5ஜி சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 6.77-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 90W சார்ஜிங் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Vivo 5G phones launched in 2025: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X