கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா: அதிவேக 5G-யும், அதீத 5G போனும்., கொஞ்சம் வெயிட்!
வருவது உறுதி ஆனால் நேரமும் காலமும் பின்னர் அறிவிக்கப்படும் என்ற வார்த்தைக்கு ஏற்ப இந்தியாவில் 5G சேவை இப்போது வரும் அப்போது வரும் என தொடர் எதிர்பார்ப்பு இருந்துக் கொண்டே வந்தது.
இந்த நிலையில் 5G அறிமுகத்துக்கான கால அவகாசம் ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. 5ஜி சேவை அறிமுகத்துக்கான தீவிர நடவடிக்கையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

சுவாரஸ்யமான புதுமையான 5ஜி ஸ்மார்ட்போன்கள்
அதற்கு ஏற்ப தற்போது இந்தியாவில் 5ஜி ஆதரவோடு ஏணைய ஸ்மார்ட்போன்களும் வெளியாகி வருகிறது.
ப்ரீமியம் விலை ஸ்மார்ட்போன்களில் மட்டுமின்றி பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி ஆதரவுகளை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வழங்க தொடங்கி விட்டது.
இருப்பினும் இந்த எந்தவகை போன்களிலும் நாட்டம் இல்லை. சிறந்த அம்சங்களோடு புதுமையான 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விருப்பம் இருக்கிறது என்றால் இந்த தகவல் உங்களுக்கு மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்திய சந்தையை ஆக்கிரமித்த இரண்டு ஸ்மார்ட்போன்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை சமீபத்தில் அறிமுகமான இரண்டு வித்தியாசமான ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்து வருகிறது.
அதாவது ஜூலை மாத இறுதியில் வித்தியாசமான தோற்றத்துடன் நத்திங் போன் (1) அறிமுகமானது. அதேபோல் அதீத பாதுகாப்பு வசதியுடன் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனும் அறிமுகமானது.
ஷ்ரஷ்ரஇருப்பினும் இதைவிட அதிகமான சூப்பர் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாக இருக்கிறது. பட்டியலில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் வெவ்வேறு தனித்துவ அம்சத்தை கொண்டிருக்கிறது.

OnePlus 10T
OnePlus 10T ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு போனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இதுவரை இல்லாத அளவிற்கு AnTuTu ஸ்கோர் ஒரு மில்லியனுக்கும் மேல் பெற்ற முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என கூறப்படுகிறது.

150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ஒன்ப்ளஸ் 10டி ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
16 ஜிபி ரேம் பவர் உடன் 4660 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இதை சார்ஜ் செய்வதற்கு 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெறலாம்.
50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா அமைப்பு, ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12 உடன் தொடங்கப்படும் என தகவல் தெரிவிக்கிறது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 இன் மேம்பட்ட சிப்செட்டான சமீபத்திய Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

iQOO 9T
iQOO 9T ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனும் சமீபத்திய Snapdragon 8+ Gen 1 மூலம் இக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த முதன்மை தர சிப்செட்டை வைத்தே கணித்துவிடலாம் இது ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன் என்று. iQOO 9T ஸ்மார்ட்போனானது ரேஸ் கார் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதேதான் ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களிலும் இருந்தது.

மேம்பட்ட அம்சங்களோடு புது ஸ்மார்ட்போன்
ஐக்யூ 9டி ஸ்மார்ட்போனானது 3 வருட சிஸ்டம் புதுப்பிப்புகள் மற்றும் 4 வருட பாதுகாப்பு இணைப்புகளை வழங்குவதாக அறிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் வெளியான தகவல் மட்டுமே, விரைவில் அதிகாரப்பூர்வ அம்சங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy Z Fold 4
Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது கேலக்ஸி இசட் வரிசையில் ஒரு புது ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.
ஸ்மார்ட்போனின் பெயர் குறிப்பிடுவது போல் இது ஃபோல்டபிள் (மடிக்கக்கூடிய) ஸ்மார்ட்போனாகும். டிஸ்ப்ளேவை இரண்டாக புத்தகம் போல் மடித்துக் கொள்ளாம்.

ப்ரீமியம் என்ற வார்த்தையை பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்போன்
முந்தைய மாடல் ஸ்மார்ட்போன் போன்று இதுவும் முதன்மை ரக அம்சத்தோடு ப்ரீமியம் விலைப் பிரிவில் அறிமுகமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த ஸ்மார்ட்போனும் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் பெரிய டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Samsung Galaxy Z Flip 4
Samsung Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. கேலக்ஸி இசட் தொடரில் அறிமுகமாகும் மற்றொரு ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இதுவாகும்.
பெயர் குறிப்பிடுவது போல் ஃப்ளிப் (மேல் நோக்கி மடிக்கக்கூடிய) ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனானது கிராஃபைட், பிங்க் கோல்ட், போரா பர்பில் மற்றும் ப்ளூ ஆகிய வண்ண விருப்பத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஃபுல் எச்டி+ 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே
Samsung Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனும் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.
6.7 இன்ச் அளவுடனான ஃபுல் எச்டி+ 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 2.1 இன்ச் அவுட்டர் டிஸ்ப்ளே, டூயல் 12 எம்பி கேமராக்கள் மற்றும் 10 எம்பி செல்பி கேமரா இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
25 வாட்ஸ் வயர் சார்ஜிங் மற்றும் 10 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 3400 எம்ஏஎச் அல்லது 3700 எம்ஏஎச் பேட்டரி பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கசிவுத் தகவல் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications