Home
Mobile

கனவுல கூட கிடைக்காது.. ரூ.17,000 விலை குறைப்பு.. உலகின் பெஸ்ட் போன்களில் ஒன்று.. என்ன மாடல்?

இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் (Best Smartphones) என்கிற பட்டியலில் இந்த போனுக்கு ஒரு நிரந்தர இடமுண்டு. அப்படியான ஒரு ஸ்மார்ட்போனின் விலையில் முழுதாக ரூ.17000 குறைக்கப்பட்டுள்ளது என்றால்.. இதென்ன கனவா அல்லது நிஜமா என்றே எண்ணத்தோன்றும்!

நாம் இங்கே பேசுவது - கூகுள் (Google) நிறுவனத்தின் பிக்சல் 7 ப்ரோ (Pixel 7 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். வருகிற ஜூலை 19 ஆம் தேதி வரை நடக்கவுள்ள பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் (Flipkart Big Saving Days Sale) போது, இதன் மீது ரூ.17,000 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.17,000 விலை குறைப்பு.. உலகின் பெஸ்ட் போன்களில் ஒன்று!

நினைவூட்டும் வண்ணம், கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது சிங்கிள் 12ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜின் கீழ் ரூ.84,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது இது ரூ.67,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

இதற்கு நீங்கள் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் பல வகையான சலுகைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். எச்டிஎப்சி கிரெடிட் கார்டுகளின் கீழ் இஎம்ஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தினால் ரூ.4,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். சாதாரண பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும்.

இதுதவிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் மீது ரூ.37,999 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும். இப்படியாக பிக்சல் 7 ப்ரோவை நீங்கள் ரூ.67,999 க்கு சொந்தமாக்கி கொள்ள முடியும். எச்டிஎப்சி வங்கி கார்டுகள் இல்லையென்றால், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்; இதன் கீழ் ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும்.

கூகுள் பிக்சல் 7 ப்ரோவை நம்பி வாங்கலாமா? ஒரு ப்ரீமியம் லெவல், பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை தேடும் எவருக்குமே பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை வழியாக கிடைக்கும் இந்த சலுகை - மிகவும் லாபகரமான ஒரு ஒப்பந்தம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஏனென்றால், கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஓஎல்இடி எல்டிபிஓ டிஸ்பிளே, ஒரு பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரி, டென்சர் ஜி2 சிப்செட் மற்றும் 48எம்பி டெலிஃபோட்டோ கேமரா சென்சார் போன்ற உயர்தர அம்சங்கள் மற்றும் வன்பொருளை கொண்ட மிகவும் திறமையான ஸ்மாட்போன் ஆகும்.

குறிப்பாக கூகுள் பிக்சல் 7 ப்ரோவுடன் கிடைக்கும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்கின் ஆனது மற்ற ஸ்கின்களுக்கு அருகில் கூட வராது. அதாவது இதைவிட சிறந்த ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போன் அடுத்து வரும் கூகுள் பிக்சல் 8 சீரீஸ் ஸ்மார்ட்போன்களாகத்தான் இருக்கும்!

கூகுள் பிக்சல் 7 ப்ரோ அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் எல்டிபிஓ க்யூஎச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளாது. முன்னரே குறிப்பிட்டபடி இது டென்சர் ஜி2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை. ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் எல்டிஏஎஃப் உடனான 48எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் + 50எம்பி ப்ரைமரி வைட் ஆங்கிள் ஷூட்டர் + 12எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில் 11எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடனான ஒரு பெரிய 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Time to Buy Google Pixel 7 Pro Rs 17000 Offer in Flipkart Big Saving Days Sale Till July 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X