Home
Mobile

புதுசு வந்ததும் பழசுக்கு பலே ஆபர்.. Samsung Galaxy S22 சீரீஸின் 3 மாடல்கள் மீதும் பெரும் விலைக்குறைப்பு!

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக அறிமுகமான கேலக்ஸி எஸ்23 சீரீஸின் இந்திய விற்பனை தொடங்கியுள்ள நிலையில், சற்றே பழைய கேலக்ஸி எஸ்22 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீது பெரிய அளவிலான விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கேலக்ஸி எஸ்23, கேலக்ஸி எஸ்23 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்23 ஆகிய 3 மாடல்களின் இந்திய விற்பனை தொடங்கியதுமே கேலக்ஸி எஸ்22 (Galaxy S22), கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Galaxy S22 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்22 (Galaxy S22 Ultra) ஆகிய 3 மாடல்களின் விலைகளும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy S22 சீரீஸின் 3 மாடல்கள் மீதும் விலைக்குறைப்பு!

விலைக்குறைப்பு மட்டுமல்ல.. எக்ஸ்சேஞ்ச் ஆபர் & பேங்க் ஆபரும் கூட உண்டு!

சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரீஸ் மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலைக்குறைப்பு பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் (Amazon) வழியாக அணுக கிடைக்கிறது. கூடுதலாக இந்த 3 மாடல்கள் மீதுமே எக்ஸ்சேஞ்ச் ஆபர் (Exchange Offer) மற்றும் பேங்க் ஆபரும் (Bank Offer) கூட அணுக கிடைக்கிறது!

சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22) மீதான சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.85,999 க்கு பதிலாக ரூ.57,998 க்கு வாங்க கிடைக்கிறது; அதாவது 33% தள்ளுபடியை பெற்றுள்ளது. கூடுதலாக ரூ.18,050 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆபர் மற்றும் பிரத்யேக பேங்க் ஆபர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த போனின் விலையை இன்னும் குறைக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Samsung Galaxy S22 Plus) மீதான சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.91,999 க்கு பதிலாக ரூ.68,890 க்கு வாங்க கிடைக்கிறது; அதாவது 24% தள்ளுபடியை பெற்றுள்ளது. கூடுதலாக ரூ.18,050 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆபர் மற்றும் பிரத்யேக பேங்க் ஆபர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த போனின் விலையை இன்னும் குறைக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா (Samsung Galaxy S22 Ultra) மீதான சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ராவின்12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.1,32,999 க்கு பதிலாக ரூ.1,09,999 க்கு வாங்க கிடைக்கிறது; அதாவது 17% தள்ளுபடியை பெற்றுள்ளது. கூடுதலாக ரூ.18,050 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆபர் மற்றும் பிரத்யேக பேங்க் ஆபர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த போனின் விலையை இன்னும் குறைக்க முடியும்.

புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) சீரிஸின் விலை விவரங்கள்

சாம்சங்கின் புதிய கேலக்ஸி எஸ்23 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங்.காம் (Samsung.com) வழியாகவும் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாகவும் வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் வேரியண்ட் (8ஜிபிரேம் + 128ஜிபி) ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸின் 8ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் ரூ.94,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக உள்ள ஹை-எண்ட் மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவின் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Best Time To Buy Flagship Phone at Low Cost Samsung Galaxy S22 Series Gets Big Price Cuts on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X