30,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்
சந்தையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா, இப்போதைக்கு பல மாடல்கள் இருப்பதால் எதை வாங்குவதென்ற குழப்பமா. இங்கு சந்தையில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள். இவை 30,000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் என்பதோடு இவைகளின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வரும் ஸ்லைடர்களில் 30,000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள், அப்படி இந்த விலைக்கு அதில் என்ன தான் இருக்கும் என்பதை தொடர்ந்து பாருங்கள்.

ஒன் ப்ளஸ் ஒன்
இதன் விலை ரூ.18,998
5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, ஆன்டிராய்டு 5.0 சார்ந்த் ஆக்ஸிஜன் சைனோஜென் ஓஎஸ் கொண்டு இயங்குவதோடு 16ஜிபி ரூ.18,998 மற்றும் 64 ஜிபி ரூ.21,998 என இரு மாடல்களில் கிடைக்கின்றது.

ஹூவாய் ஹான்ர் 6 ப்ளஸ்
இதன் விலை ரூ. 26,999
5.5 இன்ச் ஸ்கிரீன் ஃபுல் ஹெச்டி ரெசல்யூஷன் ஆன்டிராய்டு 4.4 மூலம் இயங்குகின்றது. ஹூவாயின் சொந்த கிரின் 925 ஆக்டா கோர் பிராசஸர் 3ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஏசஸ் சென்போன் 2
இதன் விலை ரூ.19,999
4ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும் சென்போன் 2 இரு மாடல்களில் கிடைக்கின்றது. 32 ஜிபி ரூ.19,999 மற்றும் 64ஜிபி ரூ.23,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டல் ஆட்டம் Z3580 பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு 5.0 மூலம் இயங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி ஆல்ஃபா
இதன் விலை ரூ.24,000
சாம்சங் கேலக்ஸி ஆல்ஃபா ரூ.39,990க்கு வெளியானாலும் தற்சமயம் ரூ.24,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 4.7 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன் ஆன்டிராய்டு 5.0 மற்றும் ஆக்டாகோர் எக்சைனோஸ் 5 பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ எக்ஸ் 2 (ஜென் 2)
இதன் விலை ரூ.24,999
சமீபத்தில் விலை குறைக்கப்பட்ட மோட்டோ எக்ஸ் ஜென் 2 தற்சமயம் 16ஜிபி மாடல் ரூ.24,999, 32ஜிபி ரூ.27,999க்கு கிடைக்கின்றது. 5.2 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்கிரீன் ஸ்டாக் ஆன்டிராய்டு 5.0 மற்றும் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ4
இதன் விலை ரூ.17,999
5 இன்ச் ஸ்கிரீன் ஃபுல் ஹெச்டி ரெசல்யூஷன் ஆன்டிராய்டு 4.4 இயங்குதளம் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஹெச்டிசி டிசையர் 826
இதன் விலை ரூ.25,000
5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்கிரீன் ஆன்டிராய்டு 5.0, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி ஈ7
இதன் விலை ரூ.19,000
5.5 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீன் ஆன்டிராய்டு 4.4 மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

மைக்ரோசாப்ட் லூமியா 830
இதன் விலை ரூ.22,000
5 இன்ச் ஐபிஎஸ் ஸ்கிரீன் க்ளியரபேக் டிஸ்ப்ளே ஹெச்டிசி ரெசல்யூஷன் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர், விண்டோஸ் போன் 8.1 இயங்குதளம் 1ஜிபி ரேம், 16ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

லெனோவோ வைப் எக்ஸ்2
இதன் விலை ரூ.17,999
5 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்கிரீன் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் இருக்கின்றதோடு ஆன்டிராய்டு 4.4 மூலம் இயங்குகின்றது.


Click it and Unblock the Notifications