இந்தியாவில் கிடைக்கும் 4 கேமரா கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!

நீங்கள் சிறந்த ஒரு குவாட் கேமரா ஸ்மார்ட்போனை தேடும் நபராக இருக்கும்பட்சத்தில், கீழே நாங்கள் வெளியிட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் நிச்சயம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

|

ஸ்மார்ட்போன் கேமராக்களின் வளர்ச்சி, தற்போது ஒரு உன்னத நிலையை எட்டியுள்ளது. ஒரு காலத்தில் நாம் கண்ட முன்னாலும் பின்னாலும் விஜிஏ கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள், இப்போது மலையேறி போய்விட்டது. தற்போது முன்பக்கத்தில் இரண்டு கேமராக்கள், பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் என்று மொத்தம் 4 கேமராக்களைக் கொண்ட தயாரிப்புகளை, ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த கேமரா அமைப்பின் மூலம் பின்னணி மங்கலானது போன்ற பல படங்களை எடுத்து, ஒரு சிறந்த புகைப்பட அனுபவத்தை நீங்கள் பெற முடிகிறது. மேலும் முன்பக்கம் மற்றும் பின்பக்க கேமராக்களைப் பயன்படுத்தி, மற்ற பல காரியங்களையும் செய்ய முடிகிறது.

ஏற்கனவே ஹானர் போன்ற சில நிறுவனங்கள், குவாட் கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்ட நிலையில், தற்போது பிரபலமடைந்து வரும் இது போன்ற ஒரு சில ஸ்மார்ட்போன்களை மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுத்து இந்த கட்டுரையில் உட்படுத்தி உள்ளோம். ஆனால் இது இன்னும் முக்கியத்துவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டுரையில் ஹானர் 9 லைட், ஹானர் 9ஐ, இன்ஃபோக்கஸ் ஸ்னாப் 4 உள்ளிட்ட ஒரு சில ஸ்மார்ட்போன்களையும், இந்திய சந்தையில் உள்ள சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளோம்.

நீங்கள் சிறந்த ஒரு குவாட் கேமரா ஸ்மார்ட்போனை தேடும் நபராக இருக்கும்பட்சத்தில், கீழே நாங்கள் வெளியிட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் நிச்சயம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஒரு ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்கள் இருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க விரும்பினால், கீழ்க்காணும் ஏதாவது ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கலாம்.

ஹானர் 9ஐ

ஹானர் 9ஐ

சிறந்த விலையில் கிடைக்கும் ஹானர் 9ஐ

முக்கிய அம்சங்கள்

  • 5.9-இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18: 9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  • ஆக்டா-கோர் கிரின் 659 செயலி (4 xஏ53 இல் 2.36ஜிஹெச்இசட் + 4 x ஏ53 இல் 1.7ஜிஹெச்இசட்) உடன் மாலிடி830-எம்பி2 ஜிபியூ
  • 4ஜிபி ரேம்
  • 64ஜிபி உள்ளக நினைவகம்
  • மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்
  • ஆன்ட்ராய்டு 7.0 (நெவ்கட்) உடன் இஎம்யூஐ 5.1
  • ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ+நானோ/மைக்ரோஎஸ்டி)
  • 16எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2எம்பி கேமரா
  • 13எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா மற்றும் இரண்டாவது 2எம்பி கேமரா
  • கைரேகை சென்ஸர்
  • 4ஜி வோல்டி3340எம்ஏஹெச் பேட்டரி (வழக்கமானது) / 3240எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி
  • ஹானர் 9 லைட் 64ஜிபி

    ஹானர் 9 லைட் 64ஜிபி

    சிறந்த விலையில் கிடைக்கும் ஹானர் 9 லைட்

    முக்கிய அம்சங்கள்

    • 5.65-இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    • ஆக்டா-கோர் கிரின் 659 செயலி உடன் மாலிடி830-எம்பி2 ஜிபியூ
    • 3ஜிபி ரேம் உடன் 32ஜிபி நினைவகம்
    • 4ஜிபி ரேம் உடன் 32ஜிபி / 64ஜிபி நினைவகம்
    • மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்த முடியும்
    • ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ) உடன் இஎம்யூஐ 8.0
    • ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ+நானோ/மைக்ரோஎஸ்டி)
    • 13எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2எம்பி கேமரா, பிடிஏஎஃப்
    • 13எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா, இரண்டாவது 2எம்பி கேமரா
    • கைரேகை சென்ஸர்
    • 4ஜி வோல்டி
    • 3000எம்ஏஹெச் பேட்டரி (வழக்கமானது)
    • இன்ஃபோக்கஸ் ஸ்னாப் 4

      இன்ஃபோக்கஸ் ஸ்னாப் 4

      சிறந்த விலையில் கிடைக்கும் இன்ஃபோக்கஸ் ஸ்னாப் 4

      முக்கிய அம்சங்கள்

      • 5.2 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் தொடுதிரை டிஸ்ப்ளே
      • 1.5ஜிஹெச்இசட் எம்டி6750என் ஆக்டா-கோர் செயலி
      • 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி ரோம்
      • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13எம்பி + 8எம்பி பின்பக்க கேமரா
      • பின்னணி மங்கலாக்குவதற்கான இரட்டை 8 எம்பி முன்பக்க கேமரா
      • இரட்டை சிம்
      • 4ஜி வோல்டி
      • வைஃபை
      • ப்ளூடூத் 4.1
      • கைரேகை சென்ஸர்
      • 3000 எம்ஏஹெச் பேட்டரி
      • டூஜீ எக்ஸ்30

        டூஜீ எக்ஸ்30

        டூஜீ எக்ஸ்30: அமேசானில் கிடைக்கிறது

        முக்கிய அம்சங்கள்

        • 5.5 இன்ச் 2.5டி ஐபிஎஸ், ஹெச்டி திரை 1280*720 பிக்சல்
        • ஆன்ட்ராய்டு 7.0 எம்டிகே6580 1.3ஜிஹெச்இசட் வரை உயர்த்த கூடிய குவாட் கோர்
        • 2ஜிபி ரேம் 16ஜிபி ரோம்; 128ஜிபி வரை உயர்த்தக் கூடிய மைக்ரோ எஸ்டி (உட்படுத்தப்படவில்லை)
        • 5.0எம்பி+5.0எம்பி முன்பக்க கேமரா
        • 5.0எம்பி+8.0எம்பி பின்பக்க கேமரா
        • ஆதரவு நெட்வர்க் டபிள்யூசிடிஎம்ஏ, ஜிஎஸ்எம். இதை வாங்குவதற்கு முன் இந்த அலைவரிசைக்கு, உங்கள் மொபைல் சேவை ஆதரவு அளிக்கிறதா என்பதை தயவுசெய்து சோதித்து பார்த்து கொள்ளுங்கள்.
        • அவ்கிடெல் கே3

          அவ்கிடெல் கே3

          அவ்கிடெல் கே3: அமேசானில் கிடைக்கிறது

          முக்கிய அம்சங்கள்

          • 5.5 இன்ச் எஃப்ஹெச்டி 1080*1920 பிக்சல் திரை
          • 4ஜிபி+64ஜிபி
          • இரட்டை 16எம்பி பின்பக்க கேமராக்கள் + இரட்டை 2எம்பி முன்பக்க கேமராக்கள்
          • கைரேகை அடையாளங்காட்டி
          • ஆன்ட்ராய்டு 7.0 எம்டிகே6750டி
          • 1.5 ஜிஹெச்இசட் வரையிலான ஆக்டா கோர்
          • நெட்வர்க்: 4ஜி, இரட்டை சிம் (நீல நிறம்)
          • 6000எம்ஏஹெச் பேட்டரி
          • How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
            டூஜீ பிஎல்12000

            டூஜீ பிஎல்12000

            டூஜீ பிஎல்12000, அமேசானில் கிடைக்கிறது

            முக்கிய அம்சங்கள்

            • டிஸ்ப்ளே அளவு 6.0 இன்ச் எஃப்ஹெச்டி+ விகிதம் 18: 9 பகுப்பாய்வு 2160*1080 பிக்சல் அடர்த்தி டிஸ்ப்ளே
            • பொதுவான பின்பக்க கேமரா 16.0எம்பி+13.0எம்பி
            • முன்பக்க கேமரா 8.0 எம்பி மற்றும் 16 எம்பி
            • ஆன்ட்ராய்டு 7.0 ஓஎஸ்
            • 12000எம்ஏஹெச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Smartphone cameras have advanced to a great extent. The recent trend is quad cameras and a few companies such as Honor have already implemented the same on their smartphones. Take a look at the best quad camera smartphones to buy in India right now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X