Home
Mobile

3 பிரீமியம் போன்கள் மீது போட்டு தாக்கும் தள்ளுபடி.. போனா வராது.. திரும்ப கிடைக்காது.. என்னென்ன மாடல்கள்?

ரூ.25,000 முதல் ரூ.35,000 க்குள் வாங்க கிடைக்கும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை (Mid-range Smartphones) பயன்படுத்தி' 'போர்' அடித்துவிட்டதா? ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி, அப்கிரேட் ஆக விரும்புகிறீர்களா? ஆம் என்றால் இதுவே அதற்கான சரியான நேரம்!

நடந்து கொண்டிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், பல நிறுவனங்களின் ப்ரீமியம் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது ரூ.50,000 க்கு கீழ் என்கிற பட்ஜெட்டிற்கு இறங்கி வந்துள்ளது. அவைகளில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 5 சிறந்த ஸ்மார்ட்போன் ஆஃபர்களின் பட்டியல் இதோ:

3 பிரீமியம் போன்கள் மீது போட்டு தாக்கும் தள்ளுபடி!

01. ஷாவ்மீ 12 ப்ரோ (Xiaomi 12 Pro): ஷாவ்மீ 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

8ஜிபி ரேம் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் ரியர் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.முன்பக்க கேமராவை பொறுத்தவரை இதில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4600mAh பேட்டரியை கொண்டுள்ளது.

பக்காவான ப்ரீமியம் அம்சங்களை பேக் செய்யும் ஷாவ்மீ 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.84,999 ஆகும். இருப்பினும் நடந்து கொண்டிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.43000 என்கிற தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கிறது.

2. மோட்டோரோலா ரேஸர் 40 (Motorola Razr 40): மோட்டோரோலா ரேஸர் 40 ஸ்மார்ட்போன் ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.9 இன்ச் மெயின் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கூடவே இது 1.5 இன்ச் கவர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் ரியர் பேனலில் 64எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. கடைசியாக இது 4200mAh பேட்டரியை கொண்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஃபிளிப் ஸ்டைல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி ரூ.99,999 ஆகும். இருப்பினும் நடந்து கொண்டிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையின் போது ரூ.50000 என்கிற தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது.

3. டெக்னோ ஃபாண்டம் எக்ஸ்2 (Tecno Phantom X2): டெக்னோ ஃபாண்டம் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உடனான 6.8 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டூயல் கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

8ஜிபி LPDDR5 ரேம் உடனான டைமன்சிட்டி 9000 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்டுடம் இந்த ஸ்மார்ட்போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5160mAh பேட்டரியை பேக் செய்கிறது. டெக்னோ ஃபாண்டம் எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.51,999 ஆகும், இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையின் போது இது வெறும் ரூ.36,998 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒருவேளை மேற்கண்ட 3 ஸ்மார்ட்போன்களுமே உங்களை ஈர்க்கும்படியான அம்சங்களை கொண்டிருக்கவில்லை என்றால், அல்லது டெக்னோ, மோட்டோ, ஷாவ்மீ பிராண்டுகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். இது ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Smartphones Under Rs 50000 Offer Price To Buy in Amazon Great Indian Festival Sale 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X