Home
Mobile

1 இல்ல.. மொத்தம் 4 ஆப்ஷன் இருக்கு.. ரூ.20,000 - ரூ.25,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்கள்!

ஒரு நல்ல லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமென்கிற தேடலில் உள்ளீர்களா? உங்களுடைய பட்ஜெட் ரூ.20000 முதல் ரூ.25,000க்குள் இருக்கிறதா? ஆமென்றால், உங்களுக்கு ஒன்றல்ல மொத்தம் 4 ஆப்ஷன்கள் உள்ளன. இந்த 2023 நவம்பரில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 4 பெஸ்ட் போன்களின் (Best Phones Under Rs.25000 in India) பட்டியல் இதோ:

01. மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo): மோட்டோரோலா எட்ஜ் 40 நியோவுடன் நாங்கள் பட்டியலை தொடங்குகிறோம். இப்போதைக்கு இந்தியாவில் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் என்றால், அது இதுதான். ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களை போல் இல்லாமல், இது அத்தியாவசிய அம்சங்களில் எந்தவிதமான சமரசங்களையும் செய்யவில்லை.

ரூ.20,000 - ரூ.25,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்கள்!

பிரமிக்க வைக்கும் pOLED டிஸ்ப்ளே, ஈர்க்கக்கூடிய 144Hz ரெஃப்ரெஷ் ரேட், வேகன்-லெதர் பேக் டிசைன், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங், பெரிய 5000mAh பேட்டரி மற்றும் 68W பாஸ்ட் சார்ஜிங், நல்ல கேமரா செட்டப் க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.20,000 - ரூ.25,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்கள்!

2. ஐக்யூ இஸட்7 ப்ரோ (iQOO Z7 Pro): இந்த பட்டியலில் உள்ள அடுத்த ஸ்மார்ட்போன் ஐக்யூ இஸட்7 ப்ரோ மாடலாகும். சாலிட் ஆன பெர்ஃபார்மென்ஸை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனை தேடுபவர்களுக்கு இதுவொரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் உடனான 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டரோஜ் என மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது.

ரூ.20,000 - ரூ.25,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்கள்!

இது மெலிதான பெஸல்களை கொண்ட கர்வ்டு டிஸ்பிளே, பல்வேறு லைட்டிங் நிலைகளில் ஈர்க்கக்கூடிய முடிவுகளை வழங்கும் 64-மெகாபிக்சல் மெயின் கேமரா, மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் பெரும்பாலான பணிகளுக்கு போதுமான 4600mAh பேட்டரி, 66W ரேப்பிட் சார்ஜிங் ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.23,999 முதல் வாங்க கிடைக்கிறது.

03. லாவா அக்னி 2 (Lava Agni 2): இந்த பட்டியலில் உள்ள மற்றொரு சாலிட் பெர்பார்மென்ஸ் ஸ்மார்ட்போன் என்றால் அது லாவா அக்னி 2 5ஜி தான். இதிலுள்ள மீடியாடெக்டைமன்சிட்டி 7050 ப்ராசஸர் மற்றும் 8ஜிபி ரேம் கூட்டணியானது மல்டிடாஸ்கிங்க்கை எளிதாக்குகிறது.மேலும் இது கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது வீடியோக்களை பார்ப்பதற்கும் கேம்களை விளையாடுவதற்கும் சிறந்தது.

ரூ.20,000 - ரூ.25,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்கள்!

இதன் கேமராக்களும் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நல்ல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க போதுமான வெளிச்சம் தேவைப்படும். ஒட்டுமொத்தமாக பிரீமியம் லுக்கில் ஒரு இந்தியன் பிராண்ட் ஸ்மார்ட்போனை நீங்க;ள் தேடுகிறீர்கள் என்றால், இதுவே உங்களுக்கான சிறந்த ஆப்ஷனாக இருக்கும். தற்போது இது அமேசானில் ரூ.18,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

4. போக்கோ எக்ஸ்5 ப்ரோ (Poco X5 Pro): போக்கோவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனுடன் நாங்கள் இந்த பட்டியலை முடிக்கிறோம், இது ஒரு ஈர்க்கக்கூடிய டிசைன், பில்ட் குவாலிட்டி மற்றும் ஃபீச்சர்-பேக்டு (அம்சங்கள் நிறைந்த) ஸ்மார்ட்போனாக உள்ளது. மேலும் இது கண்ணைக் கவரும்கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

ரூ.20,000 - ரூ.25,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்கள்!

ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட், 8ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 2.2 ஸ்டரோஜ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் ஆதரவுடன் குவாட்-ஸ்பீக்கர் சிஸ்டம், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களும் வரும் போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது, தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.18,499 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Best Smartphones under Rs 25000 Motorola Edge 40 Neo iQOO Z7 Pro Lava Agni 2 Poco X5 Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X