பார்த்தாலே ஆர்டர் போடுவீங்க.. டிசைன் அப்படி பாஸ்.. ஒன்பிளஸ் TO ரியல்மீ.. டாப் லிஸ்ட்!
நீங்கள் ரூ.25,000 பட்ஜெட்டில் ப்ளாக்ஷிப் டிசைனில் பக்கவான பர்பாமென்ஸ் உடன் 5ஜி (5G) போன்களை தேடிக் கொண்டிருந்தால் உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ், ரெட்மி கே50 5ஜி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி, ரியல்மீ 10 புரோ பிளஸ் 5ஜி, போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி போன்கள் மட்டுமே. இந்த போன்களின் முழு அம்சங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ரெட்மி கே50ஐ 5ஜி (Redmi K50i 5G) அம்சங்கள்: இந்த போன் 6.6 இன்ச் (1,080x2,460 பிக்சல்கள்) எச்டிஆர்10 (HDR10) எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 650 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி (Mediatek Dimensity 8100 SoC) ப்ராசஸர் வருகிறது.

8 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் செட்டப் உள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5080 mAh வருகிறது. பாண்டம் ப்ளூ (Phantom Blue), ஸ்டீல்த் பிளாக் (Stealth Black), குயிக் சில்வர் (Quick Silver) ஆகிய கலர்களில் வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரூ. 20,999ஆக உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite) அம்சங்கள்: இந்த போன் 6.72 இன்ச் (1080 X 2400 பிக்சல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்ட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 உடன் ஸ்னாப்டிராகன் 695 ஆக்டாகோர் எஸ்ஓசி (Snapdragon 695 Octa-core SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஆக்ஸிஜன்ஓஎஸ் (OxygenOS) வருகிறது. 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் என்று இரண்டு வேரியண்ட்களில் வருகிறது.
சாம்சங் எச்எம்6 பிரைமரி சென்சாருடன் (Samsung HM6 Primary Sensor) 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 5,000mAh பேட்டரி 67W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. பாஸ்டெல் லைம் ( Pastel Lime), குரோமெடிக் (Chromatic Gray) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் ஆரம்ப விலையை பொறுத்தவரையில், ரூ. 19,999 ஆக உள்ளது.
ரியல்மீ 10 புரோ பிளஸ் 5ஜி (Realme 10 Pro+) அம்சங்கள்: இந்த போன் 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. ரூ.25,000 பட்ஜெட்டில் கர்வ்ட் டிஸ்பிளே (Curved Display) கொண்ட ஒரே போன் ரியல்மீ 10 புரோ பிளஸ் 5ஜி மட்டும்தான். ஆண்ட்ராய்டு 13 உடன் ஆக்டோ-கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 5G சிப்செட் உள்ளது.
108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா உள்ளது. 16எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 67W சூப்பர்வூக் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. விலையை பொறுத்தவரையில், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி (Poco X5 Pro ) அம்சங்கள்: 6.67 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் pOLED டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. 108 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வெயிட் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்ற ட்ரிபிள் ரியர் செட்டப் உள்ளது.
16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5,000mAh பேட்டரி உள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ.22,999 மற்றும் ரூ.24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications