ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!
விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் தொடர்ந்து பல செல்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அதிகமாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அடுத்த மாதம் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.20,000-க்கு கீழ்
குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

1.ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது.ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
பின்பு 1,080x2,412 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 33W SuperVOOC வயர்டு சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி கேமரா
64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான
ஸ்மார்ட்போன்.

2.விவோ Y73
அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y73 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,989-ஆக உள்ளது விவோ Y73 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400பிக்சல் தீர்மானம், 570 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர்10 ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது.
விவோ Y73 ஸ்மார்ட்போன் மாடல் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y73 கேமரா
64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ Y73ஸ்மார்ட்போன். மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

3.ஒப்போ ஏ74 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, colourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி.
48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன்.

4.ரெட்மி நோட் 11டி 5ஜி
அமேசானில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என்கிற டூயல் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி போன். மேலும் 16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி,பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

5.சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது ஒரு குவாட் ரியர் கேமரா யூனிட் உடன் வருகிறது.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி வி-டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. மேலும் எக்ஸிநோஸ் 1280 ஆக்டோ-கோர் பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி,8எம்பி செல்பி கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.


Click it and Unblock the Notifications