Best in 2022: குறைந்த பட்ஜெட்டில் அறிமுகமான சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!

|

இந்த ஆண்டு சியோமி, சாம்சங், ரியல்மி, மோட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் குறைந்த பட்ஜெட்டில் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன. அதேபோல் இந்நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமானதும் 5ஜி போன்களை கூட பட்ஜெட் விலையில் விற்பனை செய்யத் துவங்கிவிட்டன.

 சிறந்த 5 போன்கள்

சிறந்த 5 போன்கள்

குறிப்பாக இனிமேல் அறிமுகமாகும் 5ஜி போன்கள் கூட பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் 2022-இல் குறைந்த பட்ஜெட்டில் அறிமுகமான சிறந்த 5 ஸ்மார்ட்போன்களைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

200 MP கேமராவுடன் கெத்தாக என்ட்ரி கொடுக்கும் Redmi Note 12 Pro Plus.! விலை இவ்வளவு கம்மியா?200 MP கேமராவுடன் கெத்தாக என்ட்ரி கொடுக்கும் Redmi Note 12 Pro Plus.! விலை இவ்வளவு கம்மியா?

iQOO Z6 Lite 5G போன்

iQOO Z6 Lite 5G போன்

இந்த ஆண்டு அறிமுகமான iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனுக்கு அதிக வரவேற்பு இருந்தது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், அருமையான கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் குறைந்த பட்ஜெட்டில் அறிமுகமானது இந்த iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனை இப்போது அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்.

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் 9 புதிய ரீசார்ஜ்களை அறிமுகம் செய்த AIRTEL.. 1 நாள் முதல் 365 நாட்கள் வரை வேலிடிட்டி!ஒரே நேரத்தில் 9 புதிய ரீசார்ஜ்களை அறிமுகம் செய்த AIRTEL.. 1 நாள் முதல் 365 நாட்கள் வரை வேலிடிட்டி!

போக்கோ எம்4 5ஜி

போக்கோ எம்4 5ஜி

ரூ.10,999-விலையில் தற்போது விற்பனை செய்யப்படும் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனுக்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் சிறந்த போன்களில் ஒன்றாக இது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா,8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் மீடியாடெக் Dimensity 700 பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ ஸ்மார்ட்போன்.

2 மில்லியன் பேரில் ஒருவரா நீங்களும் இருக்கலாம்! 2 மில்லியன் பேரில் ஒருவரா நீங்களும் இருக்கலாம்! "உடனே இதை டெலிட் பண்ணுங்க" Play Store எச்சரிக்கை.!

சாம்சங் கேலக்ஸி எம்13

சாம்சங் கேலக்ஸி எம்13

இந்த ஆண்டு மிகவும் குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்தது இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் தான். அதாவது இந்த போனில் 5ஜி சேவை மட்டும் இல்லை. மற்றபடி அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி எம்13 4ஜி போனில் உள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆணட்ராய்டு 12 இயங்குதளம், 8எம்பி செல்பி கேமரா, எக்ஸிநோஸ் 850 பிராஸசர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன்.

அடேங்கப்பா வேற லெவல்-ல இருக்கு: பூமிக்குத் திரும்பும் முன் நிலவை மிக நெருக்கமாக படம்பிடித்த NASA விண்கலம்.!அடேங்கப்பா வேற லெவல்-ல இருக்கு: பூமிக்குத் திரும்பும் முன் நிலவை மிக நெருக்கமாக படம்பிடித்த NASA விண்கலம்.!

ரியல்மி 9ஐ 5ஜி

ரியல்மி 9ஐ 5ஜி

2022 ஆம் ஆண்டில் சிறந்த போன்களில் ஒன்றாக இருக்கிறது இந்த ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது தற்போது ரூ.14,720-விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ரியல்மி போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் Dimensity 810 5G பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் கேமரா வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உதவியின் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட படத்தை பார்த்த 2 பள்ளி மாணவருக்கு தூக்கு.! என்ன படம்? எந்த நாட்டின் கோரமான சட்டம் இது?தடை செய்யப்பட்ட படத்தை பார்த்த 2 பள்ளி மாணவருக்கு தூக்கு.! என்ன படம்? எந்த நாட்டின் கோரமான சட்டம் இது?

மோட்டோரோலா ஜி42

மோட்டோரோலா ஜி42

இந்த ஆண்டு அறிமுகமான மோட்டோரோலா ஜி42 ஸ்மார்ட்போனுக்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்த போன் ரூ.11,999-விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இது 4ஜி போன் ஆகும். இருந்தபோதிலும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.


மோட்டோரோலா ஜி42 ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 6.47-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

ரூ.9000 பட்ஜெட்டில்.. இனிமே இந்த Phone தான் கிங்கு! வேற ஆப்ஷன்ஸ் பக்கமே போக வேண்டாம்!ரூ.9000 பட்ஜெட்டில்.. இனிமே இந்த Phone தான் கிங்கு! வேற ஆப்ஷன்ஸ் பக்கமே போக வேண்டாம்!

சிறந்த ஸ்மார்ட்போன்கள்...

சிறந்த ஸ்மார்ட்போன்கள்...

தற்போது குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் தான் 2022-இல் குறைந்த பட்ஜெட்டில் அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்கள் ஆகும். குறிப்பாக இதுபோன்ற குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் அனைத்து அம்சங்களும் உள்ளது என்பது தான் உண்மை.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Best Smartphones Under Rs 15000 Launched in 2022: Here's the List!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X