64 எம்பி கேமராவுடன் ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள்!
ரூ.15,000-க்கு கீழ் பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இப்போது இந்தியச் சந்தையில் கிடைக்கும் விருப்பங்களுக்கிடையே ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்வதென்பது மிகக் கடினமான செயல் தான். அப்படி குழப்பத்தில் உள்ளவர்களுள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியலை ஒரு முறை பார்த்துவிட்டுத் உங்கள் தேர்வை முடிவு செய்துகொள்ளுங்கள்.

மிக வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ள ஸ்மார்ட்போன் சந்தை
ஸ்மார்ட்போன் சந்தை குறுகிய காலத்தில் உலகெங்கிலும் மிக வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் அனைவரின் தேவைக்கும், பாக்கெட் பணத்திற்கும் ஏற்றவாறு ஸ்மார்ட்போன்கள் அனைத்து விலை பட்டியலின் கீழ் மக்களுக்கு கிடைக்கிறது.

களமிறங்கியுள்ள அதிநவீன ஸ்மார்ட்போன்கள்
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களை காட்டிலும், இந்த நாட்களில் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில் சக்திவாய்ந்த பிராசஸர்கள், பேட்டரிகள் மற்றும் முக்கியமாகப் பல கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கிறது.

ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்
இப்படி அனைத்து பிரிவுகளிலும் உங்கள் தேவையை பூர்த்திசெய்யும் ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை பிரித்து கீழே பட்டியலிட்டு குறிப்பிட்டுளோம். குழப்பம் இல்லாமல் இந்த சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியலை ஒரு முறை பார்த்துவிட்டு உங்கள் முடிவு செய்யுங்கள்.

ரெட்மி நோட் 8 ப்ரோ
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை போலவே, நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனும் ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன், லிக்விட் கூல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹீலியோ G90T பிராசஸருடன், 64 மெகாபிக்சல் கொண்ட சாம்சங் GW1 சென்சார் கொண்ட பின்பக்க கேமரா மற்றும் 20 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி ஷூட்டர் கேமராவுடன் வெறும் ரூ.14,999 என்ற விலையில் கிடைக்கிறது.

சியோமி மி ஏ3
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் 6.08' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேயுடன், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸருடன், 6 ஜிபி ரேம் வரை கொண்டுள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், சோனி IMX586 சென்சார் கொண்ட 48 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் ஆகிய சிறப்பம்சங்களுடன் வெறும் ரூ.12,499 என்ற விலையில் கிடைக்கிறது.

மோட்டோரோலா ஒன் விஷன்
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் கொண்ட ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன், ஆக்டா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 9609 பிராசஸருடன், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. இதில் 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் கொண்ட இரண்டாம் சென்சார் கேமரா, 8X டிஜிட்டல் ஜூம் மற்றும் பனோரமாவுடன், 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா உள்ளது. இதன் விலை வெறும் ரூ.14,999 மட்டுமே.

விவோ இசட் 1 ப்ரோ
விவோ இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸருடன், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் பெறுகிறது. கேம் மோடு 5.0 வெர்ஷன், 4D வைப்ரேஷன் மற்றும் 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் போன்ற கேமிங் அம்சங்களைக் கொண்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 9 இல் இயங்குகிறது. இதன் விலை ரூ.13,990 மட்டுமே.

ரியல்மி எக்ஸ்
ரியல்மி நிறுவனம் வழங்கும் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸருடன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இத்துடன் இதில் நிஃப்டி கேமிங் மோடு உள்ளது, இதனால் PUBG மொபைல் கேம் மற்றும் ஆஸ்ப்லாட் 9 போன்ற கேம்கள் அதிக பிரேம் ரேட்டை அதிகரிக்கிறது.

கூடுதல் விலையுடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக 48 மெகாபிக்சல் கொண்ட பின்பக்க சோனி சென்சார் கேமராவுடன் வெறும் ரூ.16,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த போன் மட்டும் ரூ.2000 கூடுதளுடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது இருக்கிறது.


Click it and Unblock the Notifications