Home
Mobile

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் 5ஜி போன்கள்.. கூகுள் பிக்சல் முதல் விவோ வரை.. பட்டியல் இதோ..

வரும் ஆகஸ்ட் (august) மாதம் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் தங்களது அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன. அதுவும் பட்ஜெட் விலையில் சில ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உருவாக்கியுள்ளது. இப்போது அடுத்த மாதம் வெளியாகும் போன்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

1.கூகுள் பிக்சல் 11 சீரிஸ்
வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற உள்ள 'மேட் பை கூகுள்' நிகழ்வில் பிக்சல் 11 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம். அதுவும் கடந்த ஆண்டை போலவே நான்கு போன்கள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதாவது பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல்ஸ் 11 ப்ரோஎக்ஸ்எல் மற்றும் பிக்சல் 11 ப்ரோ போல்ட் என நான்கு மாடல்கள் அறிமுகமாகும்.

ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் 5ஜி போன்கள்.. கூகுள் பிக்சல் முதல் விவோ வரை!

குறிப்பாக கூகுள் பிக்சல் 11 சீரிஸ் மாடல்கள் டென்சர் ஜி6 பிராசஸர் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 256ஜிபி மெமரி மற்றும் மேம்பட்ட கேமரா அம்சங்கள் இந்த புதிய கூகுள் பிக்சல் போன்களில் உள்ளன.

2. ஐக்யூ இசட்11
ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும். இதற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என இதுகுறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த டைமன்சிட்டி 7500 பிராசஸர், ஐபி69 ரேட்டிங், 50எம்பி ரியர் கேமரா, அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஐக்யூ போன் ரூ.30,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

3.விவோ வி80 சீரிஸ்
விவோ வி80 சீரிஸ் மாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக 1.5கே ரெசல்யூஷன் கொண்ட 6.59-இன்ச் பிளாட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 7200எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் விவோ வி80 சீரிஸ் மாடல்கள் வெளியாகும்.

அதேபோல் விவோ வி80 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா +50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் 50எம்பி செல்பி கேமரா, ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த விவோ வி80 போன் ரூ.60,000-க்கு கீழ் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது.

4.போக்கோ எம்8 பவர்
வரும் ஆகஸ்ட் 4ம் தேதி போக்கோ எம்8 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். 8000எம்ஏஎச் பேட்டரி, AMOLED டிஸ்பிளே, சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட், ஐபி65 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

மேலும் 50எம்பி ரியர் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 256ஜிபி மெமரி உள்ளிட்ட அம்சங்கள் இந்த புதிய போக்கோ எம்8 பவர் ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.20,000-க்கு கீழ் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

5.ரெட்மி நோட் 17 5ஜி
வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக 8000எம்ஏஎச் பேட்டரி, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4என்எம் சிப்செட், 50எம்பி செல்பி கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் ரூ.20,000-க்கு கீழ் இந்த ரெட்மி போன் அறிமுகமாகும்.

ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் 5ஜி போன்கள்.. கூகுள் பிக்சல் முதல் விவோ வரை!

6.விவோ எஸ்2
விவோ எஸ்2 ஸ்மார்ட்போனின் டீசர் ஏற்கனவே வெளியாகி உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இந்த புதிய விவோ போன் அறிமகமாகும். அதுவும் 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே, டைமன்சிட்டி 7360 பிராசஸர், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 7000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.

அதேபோல் விவோ எஸ்2 ஸ்மார்ட்போனில் 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 256ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.43,000 பட்ஜெட்டில் இந்த புதிய விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
Best Smartphones Launching in August 2026: Top 5 Upcoming Phones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X