ரூ.7000/-க்கு குறைவான விலையில் 2018ல் வெளியான சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!
பெரிய பெரிய போன்களை ஒப்பிடும் போது, அடிப்படை தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் சாதாரண அம்சங்களை கொண்ட போன்கள் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து வருகின்றன.
சமீபகாலமாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. பெரிய பெரிய போன்களை ஒப்பிடும் போது, அடிப்படை தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் சாதாரண அம்சங்களை கொண்ட போன்கள் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து வருகின்றன. அதிக விலை போன்களுடன் போட்டி போடும் வகையில், சிறந்த அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் தாமதமாகவே வெளியாகின.

சியோமி, ரியல்மீ, ஹானர் உள்ளிட்ட பல போன் பிராண்டுகள் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த பிராண்டுகள் பல்வேறு பட்ஜெட் போன்களை வெளியிடும் நிலையில், அவற்றில் பெரும்பாலானவை தற்போது சந்தை விற்பனையில் சக்கைப் போடு போடுகின்றன.
ரூ10,000க்கும் குறைவான விலையில் வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் தங்களுக்கென தனி முத்திரை பதித்துள்ள நிலையில், தற்போது இந்தியாவில் ரூ7000க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

சியோமி ரெட்மீ 6ஏ
*5.45-இன்ச் (1440 × 720 பிக்சல்) HD+ 18:9 2.5D கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே, 1000:1 கான்ட்ராஸ்ட் விகிதம்
*2GHz க்வாட்கோர் மீடியாடெக் A22 12nm ப்ராஸ்சஸ்சர் + IMG PowerVR GE-class GPU
*2GB ரேம், 16GB / 32GB உள்ளார்ந்த சேமிப்பு திறன் மற்றும்
மெமரிகார்டு மூலம் 256GB வரை நீட்டிக்கலாம்
* MIUI 9 உடன் ஆண்ராய்டு 8.1 (ஓரியோ) , MIUI 10 வரை நீட்டிக்கலாம்
*டூயல் சிம்(நானோ+நானோ+ மெமரிகார்டு)
*எல்டிஈ வசதியுடன் 13MP பின்புற கேமரா , PDAF, f/2.2 aperture, EIS
*5MP முன்புற கேமரா, f/2.2 aperture
*டூயல் 4ஜி வோல்ட், வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் + GLONASS
*3000mAh (சாதாரண பேட்டரி) / 2900mAh (குறைந்த பேட்டரி)

நோக்கியா 2.1
*5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்) எச்.டி திரை, ஆன்டி பிங்கர்பிரிண்ட் கோட்டிங்
*1.4GHz க்வாட்கோர் ஸ்னாப்ட்ராகன் 425 மொபைல் ப்ளாட்பார்ம் + அட்ரெனோ 308 ஜிபியூ
*1GB LPDDR3 ரேம்
*8GB உள்ளார்ந்த சேமிப்பு திறன்
* மெமரிகார்டு மூலம் 128GB வரை நீட்டிக்கப்பட்ட சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிசன்), ஆண்ராய்டு பி-க்கு மேம்படுத்தும் வசதி
*டூயல் சிம்
*8MP எல்ஈடி மற்றும் ஆட்டோ போகஸ் கொண்ட பின்புற கேமரா
*5MP முன்புற கேமரா
*4G வோல்ட்,வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ்+ GLONASS
*4100mAh பேட்டரி

ஹானர் 7எஸ்(ப்ளே 7)
*5.45-இன்ச் (1440 x 720 பிக்சல்) 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கண்ணாடி திரை
*1.5GHz க்வாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் ப்ராஸ்சஸ்சர்+ பவர்விஆர் ரோக் GE8100 ஜிபியூ
*2GB ரேம்
*16GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 256GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ) + EMUI 8.1
*டூயல் சிம்
*எல்ஈடி, பிடிஏஎப் வசதியுள்ள 13MP பின்புற கேமரா
*எல்ஈடி வசதியுள்ள 5MP முன்புற கேமரா
*4G வோல்ட்
*3020mAh உள்ளார்ந்த பேட்டரி

ஆசுஸ் ஜென்போன் லைட்1
*5.45-இன்ச் (1440 x 720 பிக்சல்) எச்டி+ 18:9 ஏஸ்பிக்ட் ரேசியோ உள்ள ஐபிஎஸ் திரை, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 800:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ
*ஆக்டா கோர் குவால்காம் 430 + 64-பிட் மொபைல் ப்ளாட்பார்ம்+ அட்ரினோ 505 ஜிபியூ
*2GBரேம்
*16GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 256GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ) + ZenUI 5.0
*டூயல் சிம்(நானோ+நானோ+எஸ்டி கார்டு)
*13MP பின்புற கேமரா
*5MP முன்புற கேமரா
*4G வோல்ட்
*3000mAh பேட்டரி

லெனோவா ஏ5
*5.45-இன்ச் (1440 × 720 பிக்சல்)எச்டி+ 18:9 2.5D வளைவான கண்ணாடி திரை
*1.5GHz க்வாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் ப்ராஸ்சஸ்சர்+ பவர்விஆர் ரோக் GE8100 ஜிபியூ
*2GB ரேம் + 16GB / 3GB ரேம் + 32GB சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 256GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ)
*டூயல் சிம்(நானோ+நானோ+எஸ்டி கார்டு)
*எல்ஈடி+f/2.2 aperture உள்ள 13MP பின்புற கேமரா
*f/2.2 aperture வசதி கொண்ட 8MP முன்புற கேமரா
*4G வோல்ட்
*பிங்கர்பிரிண்ட சென்சார்
*3000mAh பேட்டரி

லாவா இசட்81
*5.7-இன்ச்(1440 × 720 பிக்சல்) எச்டி+ 18:9 2.5D, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்ட வளைவான கண்ணாடி திரை
*2GHz க்வாட்கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm ப்ராஸ்சஸ்சர் + IMG PowerVR GE-class GPU
*2GB / 3GB ரேம், 32GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 256GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ) + Star OS 5.0
*டூயல் சிம்
*எல்ஈடி வசதியுள்ள 13MP பின்புற கேமரா
*எல்ஈடி வசதியுள்ள 13MP முன்புற கேமரா
*4G வோல்ட்
*3000mAh பேட்டரி

யூ ஏஸ்
*5.45-இன்ச் (1440 x 720 பிக்சல்) எச்.டி ,18:9 2.5D வளைந்த கண்ணாடி திரை
*1.5GHz க்வாட்கோர் க்வாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் ப்ராஸ்சஸ்சர்+ பவர்விஆர் ரோக் GE8100 ஜிபியூ
*2GB ரேம்+16GB உள்ளார்ந்த சேமிப்பு திறன்/3GB ரேம்+32GB உள்ளார்ந்த சேமிப்பு திறன்
* மெமரிகார்டு மூலம் 128GB வரை நீட்டிக்கப்பட்ட சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.0 ஓரியோ
*டூயல் சிம்(நானோ+நானோ+எஸ்டி கார்டு)
*13MP எல்ஈடி வசதி கொண்ட பின்புற கேமரா
*5MP எல்ஈடி வசதியுள்ள முன்புற கேமரா
*4G வோல்ட்,வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ்
*4000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர்
*5-இன்ச் (540 x 960 பிக்சல்) க்யூ எச்டி டிஎப்டி திரை
*1.4GHz க்வாட்கோர் எக்ஸானஸ் 7570 14nm processor ப்ராஸ்சஸ்சர்+ மாலி-T720 MP1 ஜிபியூ
*1GB ரேம்+8GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 256GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிசன்)
*டூயல் சிம்
*எல்ஈடி வசதியுள்ள 8MP பின்புற கேமரா
*5MP முன்புற கேமரா
*4G வோல்ட்,வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ்
*2600mAh உள்ளார்ந்த பேட்டரி

இன்பிநெக்ஸ் ஸ்மார்ட் 2 32GB
*5.45-இன்ச் (1440 x 720 பிக்சல்) எச்டி+ 18:9 ஏஸ்பிக்ட் ரேசியோ உள்ள 2.5D வளைவான கண்ணாடி திரை
*1.5GHz க்வாட்கோர் க்வாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் ப்ராஸ்சஸ்சர்+ பவர்விஆர் ரோக் GE8100 ஜிபியூ
*2GBரேம்+16GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்/3GBரேம்+32GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 128GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ) + XOS 3.3
*டூயல் சிம்(நானோ+நானோ+எஸ்டி கார்டு)
*13MP பின்புற கேமரா+எல்ஈடி ப்ளாஷ்
*5MP முன்புற கேமரா +எல்ஈடி ப்ளாஷ்
*4G வோல்ட்,வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ்
*பேஸ் அன்லாக்
*3050mAh பேட்டரி

10. அல்லது டி2
*5.45-இன்ச் (1440 × 720 பிக்சல்)எச்டி+ 18:9 2.5D வளைவான கண்ணாடி திரை+400நிட்ஸ் பிரகாசம்+ ஆண்டி பிங்கர்பிரிண்ட கோட்டிங்
*1.4GHz க்வாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 மொபைல் ப்ளாட்பார்ம் + அட்ரினோ 308 ஜிபியூ
*2GB ரேம் + 16GB / 3GB ரேம் + 32GB சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 128GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ)
*டூயல் சிம்
*எல்ஈடி+f/2.0 aperture உள்ள 13MP பின்புற கேமரா,சோனி IMX258 சென்சார்
*f/2.0 aperture வசதி கொண்ட 5MP முன்புற கேமரா
*4G வோல்ட்
*ஸ்ப்லாஸ் ரெசிஸ்டென்ட்(IPX2)
*3200mAh / 3140mAhபேட்டரி


Click it and Unblock the Notifications