வீட்ல விசேஷமா? DSLR கேமராவே வேண்டாம் இந்த ஸ்மார்ட்போன்கள் போதும்! நம்பி வாங்கலாம்.!

|

சில ஊர்களில் நடைபெறும் காதுகுத்து, கல்யாணம் போன்ற முக்கிய விசேஷங்களில் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை விட சிறந்த மொபைல் போன்களையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்திய சந்தையில் 100 மெகாபிக்சல், 64 மெகாபிக்சல் என சிறந்த கேமராக்களை கொண்ட பல அதிநவீன ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன.

 சிறந்த வீடியோ பதிவு செய்யும் ஸ்மார்ட்போன்கள்

சிறந்த வீடியோ பதிவு செய்யும் ஸ்மார்ட்போன்கள்

எனவே டிஸ்எல்ஆர் கேமராக்களை விட சிறந்த வீடியோ பதிவு செய்யும் ஸ்மார்ட்போன்களை தான் இப்போது மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதன்படி தரமான வீடியோக்களை பதிவு செய்யும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

 சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது பிரைமரி 108எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், இரண்டு 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கு என்றே 40எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா.

குறிப்பாக இந்த கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த போன 6.8-இன்ச் டிஸ்பிளே, 4என்எம் மேம்பட்ட சிப்வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளதுகேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.99,990-விலையில் வாங்க முடியும்.

ஒப்போ ரெனோ6 ப்ரோ 5ஜி

ஒப்போ ரெனோ6 ப்ரோ 5ஜி

ஒப்போ ரெனோ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080 X 2400 பிக்சல்கள், மீடியாடெக் Dimensity 1200 சிப்செட், 4500 எம்ஏஎச் பேட்டரி,65 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன்.

ஒப்போ ரெனோ6 ப்ரோ 5ஜி ஆனது 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

இதுதவிர செல்பீகளுக்கும், வீடீயோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு 5ஜி, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், கைரேகை ஸ்கேனர் ஆதரவும் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ6 ப்ரோ 5ஜி. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.39,990-ஆக உள்ளது.

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்

தரம் என்றால் அது ஐபோன் தான். இந்த ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதாவது 6.7-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர்ப்ரோமோஷன் ஓஎல்இடி டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஏ15 பயோனிக் சிப், 4373 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான
அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஐபோன்.

இந்த டிவைஸ் 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்களில் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராசெட்டப்பை கொண்டுள்ளது. இதன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் இந்த ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போனின் முன்பக்கத்தில் 12எம்பி TrueDepth கேமரா உள்ளது. குறிப்பாக 128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலை அமேசான் தளத்தில் ரூ.1,27,900-விலையில் வாங்க முடியும்.

விவோ எக்ஸ்80 ப்ரோ

விவோ எக்ஸ்80 ப்ரோ

விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.79,999-விலையில் வாங்க முடியும். இந்த மொபைல் 6.78-இன்ச் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி, 4700 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த மொபைல் 50எம்பி பிரைமரி கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி போர்ட்ரெயிட் கேமரா +8எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, டூயல் சிம், 5ஜி ஆதரவு எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ போன்.

இன்டர்நெட் இல்லாமல் இமெயில் அனுப்ப உதவும் Gmail Offline! அதெப்படி?இன்டர்நெட் இல்லாமல் இமெயில் அனுப்ப உதவும் Gmail Offline! அதெப்படி?

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் QHD+ Fluid AMOLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அமேசான் தளத்தில் இந்த அதிநவீன ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.66,999-விலையில் வாங்க முடியும்.

சியோமி 12 ப்ரோ

சியோமி 12 ப்ரோ

சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.62,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.73-இன்ச் AMOLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு, கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

சியோமி 12 ப்ரோ 5ஜி போனில் தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், 4600 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

இந்த டிவைஸ் 50எம்பி Sony IMX707 பிரைமரி சென்சார் + 50எம்பி Samsung JN1 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 108எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி (f/4.9) டெலிபோட்டோ கேமரா + 10எம்பி (f/2.4) டெலிபோட்டோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதேபோல் இந்த போன் 40எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

6.8-இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளே, 3200 x 1440 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எக்ஸிநோஸ் 2100 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.78,900-விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Best Smartphones for Video Recording: Here is the list: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X