விரைவில் இந்தியாவை அசத்த வரும் ஸ்மார்ட்போன்கள்..!!

By Meganathan
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது பண்டிகை காலத்தை சிறப்பிக்க தயாராகி விட்டது என்று தான் கூற வேண்டும். உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சாம்சங், ஆப்பிள், சோனி, லெனோவோ மற்றும் முன்னணி தேடுபொறியாக இருக்கும் கூகுள் என அனைத்து நிறுவனங்களும் தங்களது கருவிகளை வெளியிட காத்திருக்கின்றனர்.

தீபாவளி ரிலீஸ், டாப் 10 ஸ்மார்ட்போன்கள்..!!

அந்த வகையில் பண்டிகையை சிறப்பிக்கும் நோக்கில் இந்திய சந்தையை ஆக்கிரமிக்க இருக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் டாப் 10 பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கத்தின் படி இந்த ஆண்டும் அந்நிறுவனம் இரு கருவிகளை அறிமுகம் செய்திருக்கின்றது அதன் படி இந்த கருவிகள் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல் கிடைக்கும்.

ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ்

ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ்

3டி டச் தொழில்நுட்பம் கொண்ட முதல் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களான ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் என இரு வித திரை மற்றும் பெரும்பாலான சிறப்பம்சங்கள் ஒன்றாகவே வழங்கப்பட்டுள்ளது.

கூகுள்

கூகுள்

தோடுபொறி நிறுவனமான கூகுள் இரு நெக்சஸ் கருவிகளை அறிமுகம் செய்திருக்கின்றது. இவை பெரும்பாலும் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நெக்சஸ் 5 எக்ஸ் மற்றும் நெக்சஸ் 6பி

கூகுள் நெக்சஸ் 5 எக்ஸ் மற்றும் நெக்சஸ் 6பி

5.2 மற்றும் 5.7 இன்ச் என இரு வித திரை மற்றும் யுஎஸ்பி டைப் சி, கைரேகை ஸ்கேனர், 12.3 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் போன்ற சிறப்பம்சங்கள் ஒன்றாக வழங்கப்பட்டுள்ளன.

சோனி எக்ஸ்பீரியா இசட் 5 ப்ரீமியம்

சோனி எக்ஸ்பீரியா இசட் 5 ப்ரீமியம்

4கே திரை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் தான் எக்ஸ்பீரியா இசட் 5 ப்ரீமியம். இந்த கருவியானது தீபாவளி சமயத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லெனோவோ வைப் எஸ்1

லெனோவோ வைப் எஸ்1

இரு செல்பீ கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது தான். லெனோவோ வைப் எஸ் 1 கருவியில் 8 எம்பி மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவியும் தீபாவளியின் போதே எதிர்பார்க்கப்படுகின்றது.

சோனி

சோனி

அக்டோபரில் எதிர்பார்க்கப்படும் சோனி கருவிகள் எக்ஸ்பீரியா இசட் 5, மற்றும் சோனி எக்ஸ்பீரியா இசட் 5 காம்பாக்ட் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பீரியா இசட் 5 மற்றும் இசட் 5 காம்பாக்ட்

எக்ஸ்பீரியா இசட் 5 மற்றும் இசட் 5 காம்பாக்ட்

5.2 மற்றும் 4.6 இன்ச் திரை கொண்டிருக்கும் இந்த கருவிகளில் க்விக்சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஏசஸ் சென்ஃபோன் மேக்ஸ்

ஏசஸ் சென்ஃபோன் மேக்ஸ்

அகோடபர் வெளியாக இருக்கும் சென்ஃபோன் மேக்ஸ் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5.5 இன்ச் எச்டி திரை கொண்டிருக்கின்றது.

ஜியோனி எஸ்5.1 ப்ரோ

ஜியோனி எஸ்5.1 ப்ரோ

சீன நிறுவனமான ஜியோனி தனது புதிய எஸ்5.1 ப்ரோ கருவியை அக்டோபரில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
best smartphones coming to India soon. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X