ரூ.10,000 கீழ் கிடைக்கும் சிறந்த அட்டகாச ஸ்மார்ட்போன்கள் பட்டியல்: 4 கேமராக்கள், 5020 mAh பேட்டரியோடு!
4 கேமராக்கள், 5020 எம்ஏஎச் பேட்டரி உட்பட பல்வேறு சிறந்த அம்சங்களோடு ரூ.10,000-த்துக்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

ரூ.10,000-த்துக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு என பல்வேறு தேவைக்கு ஸ்மார்ட்போன் பிரதானமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து புதுமையான அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி ரூ.10,000-த்துக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

சியோமி ரெட்மி 9 பிரைம்
சியோமி ரெட்மி 9 பிரைம் ரூ.10,000-த்துக்கு கீழ் கிடைக்கும் சிறந்த மொபைல் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி80 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 13 மெகாபிக்சல் பிரதான கேமரா உட்பட நான்கு கேமராக்கள் இருக்கிறது. 8எம்பி முன்புற கேமரா, 5020எம்ஏஎச் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது.

ரியல்மி நார்சோ 20ஏ
ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,190 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. 12 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் கேமரா வசதி இருக்கிறது. மேலும் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்
ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,989 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீடியா டெக் ஹீலியோ ஜி70 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி பிரதான கேமரா உட்பட இரண்டு கேமராக்கள் இருக்கிறது. 5 எம்பி முன்புற கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 3 ஜிபி ரேம் வசதி இதில் இருக்கிறது.

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்
ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,915 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6.52 இன்ச் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வதீம், 13 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று கேமராக்கள் இருக்கிறது. 6000 எம்ஏஎச் பேட்டரி, 3 ஜிபி ரேம் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் இதில் இருக்கிறது.

சியோமி ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன்
சியோமி ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் விலை ரூ.8,870 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்புறகேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 4 ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கிறது.

சியோமி போக்கோ சி3 ஸ்மார்ட்போன்
சியோமி போக்கோ சி3 ஸ்மார்ட்போன் விலை ரூ.7,815 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 13 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று கேமராக்கள் இருக்கிறது. 3 ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் இதில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications