இந்த ஆண்டு வெளியான தலைசிறந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்கள்.!

|

தொழில்நுட்ப சந்தையில் பல்வேறு புதுமைகள் சமீப காலங்களில் கண்டறியப்படுகின்றன. கார், பைக் வீட்டு உபயோக பொருட்கள் என இவை நம் வாழ்க்கை முறைக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றாலும் அதிகளவு புதுமைகள் ஸ்மார்ட்போன் சந்தையில் புகுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வெளியான தலைசிறந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்கள்.!

ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதுமைகள் ஸ்மார்ட்போன்களில் புகுத்தப்படுகின்றன. இவை நம் அனுபவத்தை மிகவும் எளிமையானதாக மாற்றுகிறது. அந்த வகையில் நம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை மேம்படுத்தியுள்ள மூன்று புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஐரிஸ் ஸ்கேனர்:

ஐரிஸ் ஸ்கேனர்:

கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனம் ஐரிஸ் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை வழங்கியது.

இந்த தொழில்நுட்பம் கண் இமைகளை கொண்டு ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்யும் திறன் கொண்டுள்ளது. இது நம் ஸ்மார்ட்போன்களை மற்றவர் பயன்படுத்த முடியாத ஒன்றாக மாற்றுகிறது.

கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை கண் இமைகளை ஸ்கேன் செய்து இந்த அம்சத்தை இயக்கலாம்.

 இருளிலும் சிறப்பான புகைப்படம்:

இருளிலும் சிறப்பான புகைப்படம்:

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நொடிக்கு 200 மடங்கு வேகத்தில் கைரோ டேட்டாவை இயக்கும் திறன் கொண்ட வீடியோ ஸ்டேபிலைசேஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மென்பொருள் பிரிவில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் இந்த வசதி சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை நடுக்கமின்றி பிரதிபலிக்கிறது.

டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள்:

டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள்:

கைரேகை ஸ்கேனர்களுக்கு அடுத்தப்படியாக டூயல் கேமரா அமைப்பு ஸ்மார்ட்போன்களில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

டூயல் கேமரா அமைப்பு பட்டையாகவோ அல்லது செங்குத்தாகவோ ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்படுகிறது. இவை இரண்டும் இணைந்து சிறப்பான புகைப்படங்களை அதிக துல்லியத்துடன் பிரதிபலிக்க வழி செய்கிறது.

Best Mobiles in India

English summary
Lots and lots of technology are being invented these days in all walks of life including home appliances, Cars, bikes. One of the fields that have seen more growth in less duration is undoubtedly the Smartphone Industry.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X