Home
Mobile

OnePlus முதல் Samsung வரை.. Amazon Republic Day Sale 2026 இல் மிஸ் பண்ணவே கூடாத மெகா மொபைல் ஆபர்கள்!

அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) விற்பனை, இந்த வார இறுதியில் தொடங்க உள்ளது. அதாவது ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த விற்பனைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமேசான் வலைத்தளம் ஆனது அதன் குடியரசு தின விற்பனை 2026-இன் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் கிடைக்கும்? இந்தியாவில் கடந்த நவம்பர் 2025 இல் ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் 12GB RAM + 256GB ஆப்ஷன் அமேசான் குடியரசு தின விற்பனை 2026 இன் போது ரூ.68,999 என்கிற தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

OnePlus முதல் Samsung வரை.. மிஸ் பண்ணவே கூடாத மெகா மொபைல் ஆபர்கள்!

இதேபோல ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன் ஆனது அதன் அறிமுக விலையான ரூ.47,999 க்கு பதிலாக ரூ.44.999 க்கு வாங்கக் கிடைக்கும். மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G) ஆகிய ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.30,999 மற்றும் ரூ.23,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G), ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G), ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) மற்றும் லாவா போல்ட் என்1 5ஜி (Lava Bold N1 5G) ஆகியவைகள், அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2026 இன் போது முறையே ரூ.12,999, ரூ.11,499, ரூ.8,299 மற்றும் ரூ.7,249 க்கு வாங்க கிடைக்கும்

மேற்கண்ட விலைகளில் - வங்கி தள்ளுபடிகள் மற்றும் வரவிருக்கும் விற்பனை நிகழ்வின் போது அமேசான் வழங்கும் கூப்பன் சலுகைகள் ஆகியவைகள் அடங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 மாடலும் தள்ளுபடி விலையில் பட்டியலிடப்படும் என்று அமேசான் டீஸ் செய்துள்ளது. முன்னதாக ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர் அறிவிக்கப்பட்டு இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் ரூ.72,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது; இருப்பினும், அமேசான் குடியரசு தின விற்பனையின் போது, ​​இந்த ஸ்மார்ட்போன் ரூ.65,999 க்கு கிடைக்கும் என்று ஐக்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது

குறிப்பிடத்தக்க வகையில், இந்த விலை அனைத்து வரிகள் மற்றும் சலுகைகளையும் உள்ளடக்கியது, எனவே சில தனிநபர்கள் குறிப்பிட்ட வங்கி கார்டுகள் இல்லாவிட்டால் இந்த அளவிலான ஆபர் விலையை பெற முடியாமல் போகலாம்.

மேலும் இந்த விற்பனையின் போது விலைக் குறைப்பை காணும் மற்றொரு ஸ்மார்ட்போன் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போன் ஆகும். இது மே 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரூ.33,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

இது தவிர ஐக்யூ நியோ 10 ஆர் (iQOO Neo 10R) ரூ.24,999 க்கும், ஐக்யூ இஸட்10 (iQOO Z10) ரூ.20,499 க்கும், ஐக்யூ இஸட்10ஆர் (iQOO Z10R) ரூ.18,499 க்கும், ஐக்யூ இஸட்10எக்ஸ் (iQOO z10x) ரூ.13,499 க்கும் மற்றும் ஐக்யூ இஸட்10 லைட் (iQOO Z10 Lite) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,999 க்கும் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Smartphone deals revealed ahead Amazon Great Republic Day Sale 2026 starts Jan 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X