இந்தியாவில் வாங்கச் சிறந்த மிகச் சிறிய ஸ்மார்ட்போன்கள்: மிஸ் பண்ணாதீங்க மக்களே.!

|

இந்தியாவில் தற்போது சிறிய போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது பல செல்போன் நிறுவனங்கள் தற்போது பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.

சிறிய டிஸ்பிளே கொண்ட போன்கள்

சிறிய டிஸ்பிளே கொண்ட போன்கள்

ஆனால் இந்தியச் சந்தையில் சிறிய டிஸ்பிளே கொண்ட போன்கள் அதிகம் வருவதில்லை. ஆனால் இப்போது கூட சிறிய போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக கைகளில் வைத்து கச்சிதமாகப் பயன்படுத்த இந்த சிறிய ஸ்மார்ட்போன்கள் தான் அருமையாக இருக்கும்.

மேலும் இப்போது இந்தியாவில் வாங்கச் சிறந்த மிகச் சிறிய ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இரண்டு திட்டங்களுக்கு 75ஜிபி வரை எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்கிய வோடபோன் ஐடியா.!இரண்டு திட்டங்களுக்கு 75ஜிபி வரை எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்கிய வோடபோன் ஐடியா.!

1.ஐபோன் எஸ்இ (2022)

1.ஐபோன் எஸ்இ (2022)

ஐபோன் எஸ்இ (2022) மாடல் ஆனது 4.7-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும். மேலும் A15 Bionic சிப் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐபோன்.

குறிப்பாக ஐபோன் எஸ்இ மாடலை அமேசான் தளத்தில் ரூ.48,900-விலையில் வாங்க முடியும். அதேபோல இந்த போன் ஐஒஎஸ் 15 இயங்குதளம்,
15 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக், IP67 water resistance மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

200எம்பி மெயின் கேமராவுடன் களமிறங்கும் Xiaomi 12டி ப்ரோ.! எப்போது அறிமுகம் தெரியுமா?200எம்பி மெயின் கேமராவுடன் களமிறங்கும் Xiaomi 12டி ப்ரோ.! எப்போது அறிமுகம் தெரியுமா?

ஐபோன் எஸ்இ கேமரா

ஐபோன் எஸ்இ கேமரா

ஐபோன் எஸ்இ மாடல் 12எம்பி வைடு ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும். பின்பு 7எம்பி செல்பீ கேமராவுடன்வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஐபோன்.

இதுதவிர போட்டோகிராஃபிக் ஸ்டைல்கள், போர்ட்ரெய்ட் மோட், 4K வீடியோ போன்ற அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஐபோன் எஸ்இ மாடல்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட VLC Media Player: ஹேக்கிங் குழு லீலை- சைபர் தாக்குதல் காரணமா?இந்தியாவில் தடை செய்யப்பட்ட VLC Media Player: ஹேக்கிங் குழு லீலை- சைபர் தாக்குதல் காரணமா?

2.ஆசஸ் ஜென்போன் 9

2.ஆசஸ் ஜென்போன் 9

ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 5.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. சிறிய டிஸ்பிளே என்பதால் கையில் பிடித்து பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

தற்போது புதிய ஆசஸ் ஜென்போன் 9 தைவானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆசஸ் ஜென்போன் 9 போனின் விலை EUR 799 (இந்திய மதிப்பில் ரூ.64,800-ஆக உள்ளது).

வெளிநாடுனா முடியும்., இந்தியானா முடியாதா?- Smartphone, iPhoneகளுக்கு விரைவில் வரும் செக்!வெளிநாடுனா முடியும்., இந்தியானா முடியாதா?- Smartphone, iPhoneகளுக்கு விரைவில் வரும் செக்!

ஆசஸ் ஜென்போன் 9  சிப்செட்

ஆசஸ் ஜென்போன் 9 சிப்செட்

இந்த ஆசஸ் ஜென்போன் 9 போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. மேலும் இந்த போன் 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 12எம்பி Sony IMX363 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது..

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி Sony IMX663 கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஆசஸ் போன்.குறிப்பாக 4300 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Samsung Vs Xiaomi: ஒரே நேரத்தில் பிரமாண்ட போட்டி- எந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பெஸ்ட்?Samsung Vs Xiaomi: ஒரே நேரத்தில் பிரமாண்ட போட்டி- எந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பெஸ்ட்?

3.ஐபோன் 13 மினி

3.ஐபோன் 13 மினி

ஐபோன் 13 மினி மாடல் ஆனது 5.4-இன்ச் Super Retina டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஐபோனை அமேசான் தள்ததில் ரூ.64,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

அதாவது இந்த ஐபோன் 13 மினி ஆனது 12எம்பி வைடு லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஐபோன்.

போன் வாங்குற ஐடியா இருந்தா இந்த Vivo 5ஜி மாடலை சூஸ் பண்ணுங்க.! தரமான அம்சங்கள்போன் வாங்குற ஐடியா இருந்தா இந்த Vivo 5ஜி மாடலை சூஸ் பண்ணுங்க.! தரமான அம்சங்கள்

 ஐபோன் 13 மினி சிப்?

ஐபோன் 13 மினி சிப்?

ஐபோன் 13 மினி மாடல் A15 Bionic சிப் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஐபோன். மேலும் இந்த ஐபோன் 13 மினி ஆனது 17 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் வழங்கும் என்று கூறப்படுகிறது.

 4.கூகுள் பிக்சல் 4ஏ

4.கூகுள் பிக்சல் 4ஏ

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது 5.81-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,720-ஆக உள்ளது. குறிப்பாக 3140 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு இந்த கூகுள் பிக்சல் போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் 12எம்பி டூயல் பிக்சல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த பிக்சல் 4ஏ போன். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கூகுள் பிக்சல் 4ஏ சிப்செட்

கூகுள் பிக்சல் 4ஏ சிப்செட்

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 6ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் பல அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5.கூகுள் பிக்சல் 5

5.கூகுள் பிக்சல் 5

கூகுள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.40,040 விலையில் வாங்க முடியும்.

மேலும் இந்த போன் 12.2எம்பி வைடு லென்ஸ் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, 8ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த கூகுள் பிக்சல்போன்.

Best Mobiles in India

English summary
Best Small Smartphones to Buy in 2022: Here's the List!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X