Home
Mobile

பலரும் போட்டி போட்டு வாங்கிய Redmi போன் மீது திடீர் விலைக்குறைப்பு!

"சும்மா மெர்சலா இருக்கு!" - கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான Redmi K50i 5G ஸ்மார்ட்போனை பற்றி நீங்கள் எங்களிடம் கேட்டால், எங்களின் பதில் இப்படித்தான் இருக்கும்!

உடனே ரெட்மி கே50ஐ 5ஜி மாடல் மீது தான் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

அது வேற போன்.. ஆனால் ஒரு ஒற்றுமை உள்ளது!

அது வேற போன்.. ஆனால் ஒரு ஒற்றுமை உள்ளது!

ரெட்மி கே50ஐ ஆனது எப்படி ஒரு தரமான ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதோ.. (எங்கள் கணிப்பின்படி) வரும் நாட்களில் எப்படி "போட்டி போட்டு" வாங்கப்பட்ட உள்ளதோ.. அதே போல கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒரு ரெட்மி போனும் போட்டி போட்டு வாங்கப்பட்டது.

அந்த ரெட்மி போன் மீது தான், தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அதன் புதிய மற்றும் பழைய விலை விவரங்கள் என்ன? இப்போது இந்த போனை வாங்கலாமா? இதை வாங்க வேண்டாம் என்றால் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்? வாருங்கள் விரிவாக பார்ப்போம்!

Price Cut-ஐ பெற்றுள்ள அந்த Redmi ஸ்மார்ட்போன்!

Price Cut-ஐ பெற்றுள்ள அந்த Redmi ஸ்மார்ட்போன்!

வேறு எந்த மாடலும் இல்லை. கடந்த மார்ச் 2021 இல் அறிமுகமான சியோமி நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 10 Pro Max) தான்!

நினைவூட்டும் வண்ணம், இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது. அது 6GB + 128GB வேரியண்ட் ஆகும்.

பழைய விலை? புதிய விலை?

பழைய விலை? புதிய விலை?

சியோமி Redmi Note 10 Pro Max ஸ்மார்ட்போனின் 6GB + 128GB வேரியண்ட் ஆனது ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று, ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

எம்ஐ ப்ரொடெக்டிவ் கிளாஸ் & எம்ஐ செல்பீ ஸ்டிக்கை சேர்த்து வாங்கினால்?

எம்ஐ ப்ரொடெக்டிவ் கிளாஸ் & எம்ஐ செல்பீ ஸ்டிக்கை சேர்த்து வாங்கினால்?

டார்க் நெபுலா, டார்க் நைட், க்ளேசியல் ப்ளூ மற்றும் விண்டேஜ் ப்ரோன்ஸ் என்கிற 4 கலர் ஆப்ஷன்களின் வாங்க கிடைக்கும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனுடன் சேர்த்து, Mi Protective Glass மற்றும் Mi Selfie Stick-ஐ வாங்கும் பட்சத்தில், அதை முறையே ரூ.399 மற்றும் ரூ.999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்கலாம்.

ரூ.17,999 க்கு Redmi Note 10 Pro Max வொர்த்-ஆ?

ரூ.17,999 க்கு Redmi Note 10 Pro Max வொர்த்-ஆ?

இது கொடுக்கும் பணத்திற்கு 'வொர்த்' ஆன ஸ்மார்ட்போன் தானா? என்கிற முடிவை எடுப்பதற்கு முன், ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

Redmi Note 10 Pro Max போனின் ஹைலைட்டை அதன் டிஸ்பிளே தான்! இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1,200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், HDR10+, TUV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 லேயர் உடனான 6.67-இன்ச் அளவிலான FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸர், ஸ்டோரேஜ், பேட்டரி: குறை சொல்லும் படி இல்லை!

ப்ராசஸர், ஸ்டோரேஜ், பேட்டரி: குறை சொல்லும் படி இல்லை!

அட்ரெனோ 618 GPU உடனாக Qualcomm Snapdragon 732G SoC மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 8GB வரையிலான ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜையும் பேக் செய்கிறது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12 கஸ்டம் ஸ்கின் (அவுட் ஆஃப் பாக்ஸ்) கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட்-சார்ஜிங் ஆதரவுடன் 5,020mAh பேட்டரியை மூலம் சக்தியூட்டப்படுகிறது.

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

Redmi Note 10 Pro Max ஆனது 108MP Samsung ISOCELL GW3 மெயின் கேமரா + 120-டிகிரி FoV உடன் 8MP அல்ட்ரா-ஆங்கிள்-வைட் சென்சார் + 5MP டெலி-மேக்ரோ சென்சார் + 2MP டெப்த் சென்சார் என்கிற குவாட் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா உள்ளது.

யாரெல்லாம் வாங்கலாம்... யாரெல்லாம் புறக்கணிக்கலாம்..

யாரெல்லாம் வாங்கலாம்... யாரெல்லாம் புறக்கணிக்கலாம்..

சியோமியின் Redmi Note சீரீஸ் என்றாலே அது ஒரு ஆல்-ரவுண்டர் ஆகத்தான் இருக்கும். ஆனாலும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது வெறுமனே "தற்பெருமை" பேசுவது போல் தான் தெரிகிறது.

ஏனெனில், இதன் ஒட்டுமொத்த கேமராவின் தரம் உண்மையில் அவ்வளவு பயனளிப்பதாக தெரியவில்லை. இதன் பேட்டரி லைஃப்பும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து "பலங்களும்" இதை விட விலை குறைவான Redmi Note 10 Pro-விற்கும் பொருந்துகிறது.

இப்படி இருக்கும் போது யார் 'ப்ரோ மேக்ஸ்' மாடலை வாங்குவார்கள்? விலை குறைவான 'ப்ரோ' மாடலைத்தானே வாங்குவார்கள்?

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸிற்க்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்?

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸிற்க்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்?

தற்போது இந்தியாவில் ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் எந்தவொரு "பெஸ்ட்" ஸ்மார்ட்போனுமே ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸை "ஓரங்கட்டும்" என்பதில் சந்தேகமே வேண்டாம்.

01. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G) - ரூ.19,540
02. ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 11 Pro+ 5G) - ரூ.19,890
03. போக்கோ எக்ஸ்4 5ஜி (Poco X4 Pro 5G) - ரூ.18,999
04, மோட்டோரோலா மோட்டோ ஜி71 (Motorola Moto G71) - ரூ.18,999
05. ரெட்மி நோட் 11டி 5ஜி (Redmi Note 11T 5G) - ரூ. 15,698
06. விவோ டி1 (Vivo T1) - ரூ.15,990
07. ஐக்யூ இசட்5 (iQOO Z5) - ரூ.19,990
08. ரியல்மி 8எஸ் 5ஜி (Realme 8s 5G) - ரூ.16,329
09. மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் (Motorola Edge 20 Fusion) - ரூ.18,999

இதில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்!

Photo Courtesy: Mi.com, Amazon

Best Mobiles in India

English summary
Best Selling Mid Range Phone From Xiaomi Gets Price Cut Check Redmi Note 10 Pro Max New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X