Home
Mobile

சரியான நேரத்தில் ரூ.3000 விலைக்குறைப்பை பெற்ற தரமான Samsung 5G போன்!

சாம்சங் (Samsung) நிறுவனம், கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான முறையில் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மீது விலைக்குறைப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது.

அந்த பட்டியலில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களும் உள்ளன, மிட்-ரேன்ஜ் மற்றும் ப்ரீமியம் மாடல்களும் உள்ளன.

நினைவூட்டும் வண்ணம்...

நினைவூட்டும் வண்ணம்...

நினைவூட்டும் வண்ணம், சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது, அதற்கு முன்னதாக, சாம்சங் கேலக்ஸி எஃப்22 மீது ரூ.2000 என்கிற ப்ரைஸ் கட் அறிவிக்கப்பட்டது.

அதேபோல சாம்சங் கேலக்ஸி F23 மற்றும் சாம்சங் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் மீதும் முறையே ரூ.1500 மற்றும் ரூ.5000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்க்கப்பட்டது.

Price Cut பட்டியலில் லேட்டஸ்ட் ஆக  Samsung போன்!

Price Cut பட்டியலில் லேட்டஸ்ட் ஆக Samsung போன்!

நாட்டில் 5ஜி சேவைகள் அறிமுகமாகவுள்ள (சரியான) நேரத்தில், சாம்சங் நிறுவனம் தனது எஃப்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Samsung Galaxy F42 மாடலின் மீது விலை குறைப்பை அறிவித்துள்ளது.

இப்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.3,000 என்கிற குறைவான விலைக்கு வாங்க கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. ஆனால் ரூ.3000 என்கிற விலைகுறைப்பானது கேலக்ஸி F23 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாறுபாட்டின் மீது மட்டுமே கிடைக்கிறது.

Samsung Galaxy F42-இன் புதிய விலை:

Samsung Galaxy F42-இன் புதிய விலை:

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy F42 ஆனது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வெளியானது - அது 6GB+128GB மற்றும் 8GB+128GB ஆகும்.

தற்போது, இதன் ​​6ஜிபி ரேம் ஆப்ஷன் மட்டுமே ரூ.3,000 என்கிற "விலை வீழ்ச்சியை" பெற்றுள்ளது. ஆக இப்போது அதை நீங்கள் ரூ.17,999 க்கு வாங்கலாம்.

சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி அபிஷனிற்கான விலைக் குறைப்பை இன்னும் அறிவிக்கவில்லை, ஆக அது இன்னமும் ரூ.22,999 க்கு தான் வாங்க கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் மேட் பிளாக் மற்றும் மேட் ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.17,999-க்கு Samsung Galaxy F42 5G என்னென்ன அம்சங்களை வழங்குகிறது?

ரூ.17,999-க்கு Samsung Galaxy F42 5G என்னென்ன அம்சங்களை வழங்குகிறது?

Samsung Galaxy F42 5G ஆனது 6.6 இன்ச் அளவிலான FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை கொண்டுள்ளது.

MediaTek Dimensity 700 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது Android 11 ஓஎஸ் அடிப்படையிலான Samsung One UI 3.1 மூலம் இயங்குகிறது.

இந்த 5ஜி போன் 12 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவுடன் வருகிறது: N1 (2100), N3 (1800), N5 (850), N7 (2600), N8 (900), N20 (800), N28 (700), N66 (AWS-3), N38 (2600), N40 ஆகியவை அடங்கும் (2300), N41 (2500), மற்றும் N78 (3500).

கேமரா, பேட்டரி எல்லாம் எப்படி?

கேமரா, பேட்டரி எல்லாம் எப்படி?

வயர்டு மற்றும் புளூடூத் ஹெட்செட்களுக்கான Dolby Atmos ஆதரவை கொண்டுள்ள Samsung Galaxy F42 5G ஆனது முன்பக்கத்தில் 8MP கேமராவை கொண்டுள்ளது.

பின்பக்கத்தில், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் 64எம்பி ப்ரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் (115 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ) + 2எம்பி லைவ் ஃபோகஸ் லென்ஸ் உள்ளன. இதில் 'நைட் மோட்' அம்சமும் உள்ளது.

5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் 15W அடாப்டர் மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Best Samsung 5G Smartphone Under Rs 20000 Galaxy F42 get Rs 3000 Price Cut in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X