Home
Mobile

ஆர்டர் அள்ளுமே.. ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த Samsung 5ஜி போன்கள்.. 50எம்பி கேமரா.. இதோ பட்டியல்..

மோட்டோரோலா, விவோ, ஒப்போ, நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சாம்சங் (SAMSUNG) நிறுவனம். குறிப்பாக சாம்சங் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.12,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த சாம்சங் 5ஜி போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி (SAMSUNG Galaxy F16 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,499 விலையில் வாங்க கிடைக்கும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

 ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த Samsung 5ஜி போன்கள்..

அதேபோல் டைமன்சிட்டி 6300 (Dimensity 6300 Chipset) சிப்செட், 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல அம்சங்கள் உடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போன் வெளிவந்தது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். மேலும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. தண்டர் பிளாக் (Thunder Black), ப்ளஷ் பிங்க் (Blush Pink), மின்ட் கிரீன் (Mint Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் ரூ.12,624 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.11124 விலையில் வாங்கிவிட முடியும்.

 ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த Samsung 5ஜி போன்கள்..

மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் ( Dimensity 6100+ Chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 6.5-இன்ச் அளவிலான சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது சாம்சங் போன். இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன.

50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் (Triple Rear Camera Setup) சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன்.

சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) ஸ்மார்ட்போனை ரூ.9,199 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக 6.7-இன்ச் எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஒன் யுஐ 7 (One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ்இ யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் ரூ.9,198 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் 6.7-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு நாட்ச் (Infinity-U notch) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன். இதன் டிஸ்பிளேவில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த சாம்சங் போன் இயங்குகிறது. 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு இந்த சாம்சங் போனில் உள்ளது.

 ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த Samsung 5ஜி போன்கள்..

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (SAMSUNG Galaxy A14 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன். மேலும் 1080பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

Exynos 1330 சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சாம்சங் போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Samsung 5G Phones Under Rs 12000 in India: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X