Home
Mobile

ரூ.15,000-க்குள் வாங்க கிடைக்கும் அட்டகாசமான Redmi போன்கள்: இதோ பட்டியல்.!

ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அதேசமயம் தனித்துவமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் போன்கள் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி போன்

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் ரூ.15,000-க்குள் வாங்க கிடைக்கும் அசத்தலான ரெட்மி போன்களின் பட்டியலை இப்போது
சற்று விரிவாகப் பார்ப்போம்.

1.ரெட்மி 10 பிரைம்

1.ரெட்மி 10 பிரைம்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

மேலும் 1,080x2,400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

ரெட்மி 10 பிரைம்  கேமரா

ரெட்மி 10 பிரைம் கேமரா

50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற குவாட்-கேமரா அமைப்பைக கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். மேலும் 8எம்பி செல்பீ கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

 2.ரெட்மி நோட் 10எஸ்

2.ரெட்மி நோட் 10எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது.

அதேபோல் ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

 ரெட்மி நோட் 10எஸ் பேட்டரி

ரெட்மி நோட் 10எஸ் பேட்டரி

இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. மேலும் 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

3.ரெட்மி நோட் 11

3.ரெட்மி நோட் 11

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11.

குறிப்பாக இந்த போன் 50எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பி கேமரா, 4ஜி எல்இடி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 போன்ற பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி போன்.

4.ரெட்மி நோட் 10டி 5ஜி

4.ரெட்மி நோட் 10டி 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி போனின விலை ரூ.11,999-ஆக உள்ளது.குறிப்பாக ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் FHD+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, கொரில்லா கிளாஸ், மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன்.

இந்த போன் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டர்பிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி,18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி போன்.

 5.ரெட்மி 11 பிரைம் 5ஜி

5.ரெட்மி 11 பிரைம் 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 11 பிரைம் 5ஜி போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

இந்த போன் ஃபுல் எச்டி டிஸ்பிளே, மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் 50எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ரெட்மி போன்.

Best Mobiles in India

English summary
Best Redmi Phones Under Rs 15,000: Here's the List: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X