Home
Mobile

போடு ஆர்டர் போடு.. 200எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. டாப் 5 பெஸ்ட் ரெட்மி 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

இந்தியாவில் ஒன்பிளஸ், விவோ, மோட்டோ, சாம்சங் போன்களை விட ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தான் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது பட்ஜெட் விலையில் தரமான சிப்செட், அருமையான கேமராக்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த ரெட்மி போன்கள் வெளிவருகின்றன.

எனவே தான் ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளன. சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் வாங்க சிறந்த 5 பெஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

200எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. டாப் 5 பெஸ்ட் ரெட்மி 5ஜி போன்கள்..

டாப்-1: ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,000-க்கு கிழ் வாங்கக் கிடைக்கிறது. குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.79-இன்ச் டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், பாட்டம் ஃபாயரிங் லவுட்ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது.

டாப்-2: ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.15,499 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 6என்எம் ஆக்டோ-கோர் 5ஜி சிப்செட், 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, அட்ரினோ 619 ஜிபியு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 12 5ஜி போன் அறிமுகமாகும்.

200எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. டாப் 5 பெஸ்ட் ரெட்மி 5ஜி போன்கள்..

டாப்-3: ரெட்மி நோட் 11டி 5ஜி (Redmi Note 11T 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசர்ன தளத்தில் ரூ.17,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி ஆக்டோ-கோர் 5ஜி சிப்செட் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி மாடல்.

இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 50எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது.

டாப்-4: ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி (Redmi Note 12 Pro 5G) ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.21,620 விலையில் வாங்க முடியும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியில் கிடைக்கும். 6.6-இன்ச் டிஸ்பிளே, டைமன்சிட்டி 1080 சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

200எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. டாப் 5 பெஸ்ட் ரெட்மி 5ஜி போன்கள்..

டாப்-5: ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி (REDMI Note 12 Pro+ 5G) ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ27,999 விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போனுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். 200எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, டைமன்சிட்டி 1080 சிப்செட், 4090 எம்ஏஎச் பேட்டரி, 6.67-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Redmi 5G Smartphones to Buy in India 2023: here Top 5 List : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X