Home
Mobile

2025-ல் அறிமுகமான சிறந்த Realme 5ஜி போன்கள்.. பட்ஜெட் விலை.. 7000mAh பேட்டரி.. இதோ பட்டியல்..

இந்தியாவில் ரியல்மி (realme) நிறுவனம் தொடர்ந்து கம்மி பட்ஜெட்டில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது 2025-ல் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த பட்ஜெட் விலை ரியல்மி 5ஜி போன்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரியல்மி பி3எகஸ் 5ஜி (realme P3x 5G) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ரூ.11,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 6.72-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட், ஐபி69 ரேட்டிங், 45W பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

2025-ல் அறிமுகமான சிறந்த Realme 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

ரியல்மி 15எக்ஸ் 5ஜி (realme 15x 5G) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ரூ.17,499 விலையில் வாங்க கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, ஐபி69 ரேட்டிங், 60W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி செல்பி கேமரா, 50எம்பி சோனி டூயல் ரியர் கேமரா, டைமன்சிட்டி 6300 6என்எம் ஆக்டா-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 6.8-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ரியல்மி பி3 5ஜி (realme P3 5G) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.15,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஐபி69 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 45W சார்ஜிங், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 பிராசஸர், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

2025-ல் அறிமுகமான சிறந்த Realme 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

ரியல்மி சி85 5ஜி (Realme C85 5G) ஸ்மார்ட்போன் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.14,999 விலையில் இந்த புதிய ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 7000mAh பேட்டரி, IP69K ரேட்டிங், டைமன்சிட்டி 6300 சிப்செட், 6.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ரியல்மி பி3 லைட் 5ஜி (Realme P3 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,499 விலையில் வாங்க கிடைக்கிறது. 32எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 6.67-இன்ச் டிஸ்பிளே, டைமன்சிட்டி 6300 சிப்செட், 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது.

2025-ல் அறிமுகமான சிறந்த Realme 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

ரியல்மி பி4 5ஜி (realme P4 5G) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.18,499 விலையில் வாங்க கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.77-இன்ச் டிஸ்பிளே, 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (realme Narzo 80 Lite 5G) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.10,688 விலையில் வாங்க கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 6.67-இன்ச் டிஸ்பிளே, ஐபி64 ரேட்டிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Realme 5G phones launched in 2025: Check list here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X